Rohit-Virat In 2026: 2026ல் ரோஹித் – கோலி எத்தனை சர்வதேச போட்டிகளில் விளையாடுவார்கள்..? முழு விவரம் இங்கே!
Rohit Sharma-Virat Kohli Matches In 2026: இந்திய அணி, 2026 அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு தொடரில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் விளையாடப்படும். ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறந்த சாதனையை படைத்துள்ளனர்.

ரோஹித் சர்மா - விராட் கோலி
இந்திய கிரிக்கெட்டின் (Indian Cricket Team) இரண்டு ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இப்போது இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். இருவரும் டி20 சர்வதேச போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். ஆனால் 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் கொண்டு, இந்த இரண்டு வீரர்களும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இன்றுடன் முடிவடையவுள்ள 2025ம் ஆண்டு ரோஹித் (Rohit Sharma) மற்றும் கோலிக்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்தது. 2025ம் ஆண்டில் ரோஹித்தின் தலைமையில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இப்போது, 2026 ரோஹித் மற்றும் கோலி வாழ்க்கையில் ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும். ஏனெனில் இந்த காலகட்டத்தில் விளையாடும் ஒருநாள் போட்டிகள் 2027 உலகக் கோப்பை அணியில் ரோஹித் மற்றும் கோலி இடத்தை பிடிப்பதற்கான அடிப்படையாக மாறும்.
ALSO READ: 2025ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் மிக குறைந்த ஸ்கோர்.. டாப் 2வில் இந்திய அணி!
2026ம் ஆண்டில் இந்திய அணி எத்தனை ஒருநாள் போட்டிகளில் விளையாடும்?
2026ம் ஆண்டில் இந்திய அணி 6 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக மொத்தம் 18 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொடர்களும் அடங்கும். ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் தங்கள் உடல் தகுதியைப் பேணி, தங்கள் ஃபார்மைத் தக்க வைத்துக் கொண்டால், இந்த போட்டிகளில் பெரும்பாலானவற்றில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். உலகக் கோப்பைக்கு முன் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இந்த 2026ம் ஆண்டு ரோஹித் மற்றும் கோலிக்கு சிறப்பு வாய்ந்தது. மேலும் அனைவரும் அவர்களின் செயல்திறன் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ரோஹித் மற்றும் விராட்டுக்கு ஏராளமான வாய்ப்புகள்:
ஜனவரி 2026ம் ஆண்டில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு தொடரில் விளையாடும். 2026ம் ஆண்டு ஜனவரி 11 முதல் 18 வரை 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும். இது இந்த ஆண்டின் தொடக்கமாகவும், விராட் மற்றும் ரோஹித் தங்கள் ஃபார்மைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கும். இதைத் தொடர்ந்து, 2026ம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 2026ம் ஆண்டு ஜூலை 14 முதல் 19 வரை 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து, இந்திய அணி செப்டம்பரில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம். ஆனால் அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ALSO READ: 2025ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள்.. முதலிடத்தில் இந்த அணியா..?
இந்திய அணி, 2026 அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு தொடரில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் விளையாடப்படும். ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறந்த சாதனையை படைத்துள்ளனர். எனவே இந்த தொடரும் அவர்களுக்கு மறக்கமுடியாததாக மாறலாம். இதற்கிடையில், இந்திய அணி 2026ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். இங்கு 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும். பின்னர், இந்த 2026ம் ஆண்டின் இறுதியில், இந்திய அணி இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு தொடரில் விளையாடும். இதில் 3 ஒருநாள் போட்டிகளும் அடங்கும்.