Gautam Gambhir: கம்பீருக்கு இனிமேல்தான் சோதனை ஆரம்பம்.. எச்சரித்த சவுரவ் கங்குலி!

2027 ODI World Cup: கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ், இந்திய அணி சமீபத்தில் சிறப்பாக செயல்பட்டு முக்கிய ஏசிசி மற்றும் ஐசிசி பட்டங்களை வென்றுள்ளது. அதாவது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025, 2025 ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை 2026 என 3 முக்கிய கோப்பைகளை தட்டி தூக்கியது.

Gautam Gambhir: கம்பீருக்கு இனிமேல்தான் சோதனை ஆரம்பம்.. எச்சரித்த சவுரவ் கங்குலி!

கவுதம் கம்பீர் - சவுரவ் கங்குலி

Published: 

14 Mar 2026 14:33 PM

 IST

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் (Gautam Gambhir) சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க வகையில் தனது பயிற்சியின்கீழ் அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறார். அவரது பயிற்சியின் கீழ், இந்திய அணி (Indian Cricket Team) சமீபத்தில் சிறப்பாக செயல்பட்டு முக்கிய ஏசிசி மற்றும் ஐசிசி பட்டங்களை வென்றுள்ளது. அதாவது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025, 2025 ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை 2026 என 3 முக்கிய கோப்பைகளை தட்டி தூக்கியது. இதன் மூலம், மிகக் குறுகிய காலத்தில் இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்ற முதல் இந்திய பயிற்சியாளர் என்ற பெருமையை கவுதம் கம்பீர் பெற்றுள்ளார். இருப்பினும், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, கம்பீருக்கு உண்மையான சோதனை இன்னும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: என் தலைமை பயிற்சிக்கு ஜெய் ஷாதான் காரணம்.. சீக்ரெட்டை உடைத்த கவுதம் கம்பீர்!

2027 உலகக் கோப்பைதான் கம்பீருக்கு மிகப்பெரிய டெஸ்ட்:

முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியின் ஒரு நேர்காணலில், ”2027 ஒருநாள் உலகக் கோப்பை, கம்பீரின் உத்தி மற்றும் தலைமைத்துவம் உண்மையிலேயே சோதிக்கப்படும் போட்டியாக இருக்கும். கம்பீருக்கு மிகப்பெரிய சோதனையே 2027 ஒருநாள் உலகக் கோப்பையாக இருக்கும். இந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெறும். அங்கு நிலைமைகள் சவாலானதாகக் கருதப்படுகின்றன. தென்னாப்பிரிக்காவின் ஆடுகளங்களும் வானிலையும் ஒரு அணியின் உண்மையான திறனை சோதிக்கின்றன. தற்போதைய அணியுடன் கம்பீர் சிறப்பாக செயல்பட முடியும்” என்று தெரிவித்தார்.

ஆறாத வடுவாக மாறிய 2023 ஒருநாள் உலகக் கோப்பை:

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி அற்புதமாக விளையாடி இறுதிப் போட்டியை எட்டியது. அந்த அணி போட்டி முழுவதும் தோற்காமல் ரோஹித் சர்மா தலைமையில் இறுதிப்போட்டியை எட்டியது. இருப்பினும், இந்திய அணி அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதனால்தான் 2027 உலகக் கோப்பை இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

கோலி மற்றும் ரோஹித்துக்கு கடைசி வாய்ப்பு?

கோலி, ரோஹித் குறித்து பேசிய சவுரவ் கங்குலி, “இந்தியாவின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு 2027 உலகக் கோப்பை கடைசி வாய்ப்பாக இருக்கலாம் இதன் விளைவாக, கோப்பையை வெல்ல இந்திய அணியின் மீதான அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும்.” என்றார்.

ALSO READ: அக்சர் படேலிடம் மன்னிப்பு கேட்ட சூர்யகுமார் யாதவ்.. இந்திய அணியில் நடந்தது என்ன?

டெஸ்ட் போட்டி குறித்து பேசிய கங்குலி, “ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னேற்றம் அடைய வேண்டும். பிட்ச் பற்றி அதிக கவனம் செலுத்தாமல், சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். கம்பீர் பிட்சுகளை அவர்களின் மனதில் இருந்து அகற்ற வேண்டும். நல்ல பிட்ச்களில் போட்டிகள் நடத்தப்பட்டால், அணி சிறந்த முடிவுகளை அடைய முடியும். கம்பீர் ஒரு நல்ல பயிற்சியாளர் என்றும் அவருக்கு வேலை செய்ய நேரம் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Follow Us
மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட பெண் உயிரோடு வந்ததால் பரபரப்பு - பிலிபித்தில் நடந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் விளக்கம்”
எரிவாயு தட்டுப்பாடு.. சிறிய உணவகங்கள் மூடல், கருப்புச் சந்தையில் சிலிண்டர் ரூ.3000 வரை உயர்வு..
ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல இந்தியாவுக்கு அனுமதி.. வெளிய்றவுத்துறை அமைச்சர் சொன்ன விஷயம்..
ஈராக் அருகே எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு