Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Watch Video: கிரிக்கெட் வீரர் வீட்டில் துப்பாக்கிச்சூடு… உடைந்து சிதறிய கதவு, கார்..!

Naseem Shah House: வைரலான வீடியோவில், தோட்டாக்களின் தாக்கத்தால் இரும்பு பிரதான வாயிலில் ஏராளமான துளைகள் ஏற்பட்டுள்ளதையும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கருப்பு காரின் கூரை சேதமடைந்தது. சமூக ஊடகங்களில் வெளியான ஒரு கூற்றின்படி, காவல்துறையினர் வந்த நேரத்தில், தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டனர்.

Watch Video: கிரிக்கெட் வீரர் வீட்டில் துப்பாக்கிச்சூடு… உடைந்து சிதறிய கதவு, கார்..!
நசீம் ஷா வீட்டில் தாக்குதல்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 11 Nov 2025 00:08 AM IST

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவின் (Naseem Shah) வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2025 நவம்பர் 9ம் தேதியான நேற்று, பாகிஸ்தானின் லோயர் டிர் மாயரில் உள்ள நசீம் ஷாவின் வீட்டின் மெயின் வாயிலில் துப்பாக்கிச் சூடு (Gun Fire) நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின்போது மெயின் வாசல், ஜன்னல் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் ஆகியவையும் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தநிலையில், நசீம் ஷா வீடு தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

ALSO READ: பயிற்சியின்போது பாலியல் துன்புறுத்தல்.. கிரிக்கெட் வாரியத்தின் மீது முன்னாள் மகளிர் வங்கதேச கேப்டன் புகார்!

என்ன நடந்தது..?


இதுகுறித்து பாகிஸ்தான் செய்தி நிறுவனமான தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் வெளியிட்ட தகவலின்படி, ”பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவின் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மெயின் நுழைவாயில், ஜன்னல் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டுகள் வீசப்பட்டன. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சந்தேக நபர்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து, மாயர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று போலீசார் தெரிவித்திருந்தது” என்று தெரிவித்தது.

வைரலாகும் வீடியோ:


வைரலான வீடியோவில், தோட்டாக்களின் தாக்கத்தால் இரும்பு பிரதான வாயிலில் ஏராளமான துளைகள் ஏற்பட்டுள்ளதையும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கருப்பு காரின் கூரை சேதமடைந்தது. சமூக ஊடகங்களில் வெளியான ஒரு கூற்றின்படி, காவல்துறையினர் வந்த நேரத்தில், தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டனர்.

ALSO READ: இது நடக்கவில்லை என்றால் ஏமாற்றம் வேண்டாம்.. மகளிர் அணிக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை!

சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தாக்குதலுக்கான காரணம் விரைவில் கண்டறியப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஷாவும் ஒருவர். நசீம் ஷா 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார்.