Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ISSF World Cup 2025: ISSF உலகக் கோப்பையில் வெண்கலம்.. கலக்கிய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Elavenil Valarivan Wins Bronze: இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன் ISSF உலகக் கோப்பை 2025-ல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். தகுதிச் சுற்றில் 635.9 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இறுதிப் போட்டியில் ஒரு கட்டத்தில் முதலிடத்தில் இருந்தாலும், இறுதியில் 231.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றார். சீனாவின் வாங் ஷிஃபை தங்கம் வென்றார்.

ISSF World Cup 2025: ISSF உலகக் கோப்பையில் வெண்கலம்.. கலக்கிய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!
இளவேனில் வாலறிவன்Image Source: Gun For Glory/Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 10 Jun 2025 22:25 PM

இந்திய மகளிர் துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன் (Elavenil Valarivan) ISSF உலகக் கோப்பையில் (ISSF World Cup 2025) அற்புதமாக செயல்பட்டு பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். இன்று அதாவது 2025 ஜூன் 10ம் தேதி ISSF உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு கட்டத்தில் வாலறிவன் முதலிடத்தில் இருந்தார். அப்போது, அனைவரும் இவரே தங்கப்பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்த்தனர். ஆனால் இறுதியில் வெண்கலப் பதக்கத்துடன் தனது இலக்கை முடித்து கொண்டார். அதன்படி, 231.2 புள்ளிகளுடன் இளவேனில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றார். அதேநேரத்தில் சீனாவின் 18 வயதே ஆன வாங் ஷிஃபை 252.7 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், கொரியாவின் குவான் யுன்ஜி 252.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இறுதிப் போட்டியை 10.7 புள்ளிகளுடன் தொடங்கிய இளவேனில்:

இரண்டு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வீராங்கனையான இளவேனில், முதல் ஐந்து ஷாட்களுக்குப் பிறகு ஒலிம்பிக் சாம்பியனான கொரியாவின் யுன்ஜியை விட 0.3 புள்ளிகள் பின்தங்கினார். அப்போது, இளவேனில் 10.8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார்.  12 ஷாட்களுக்குப் பிறகு இளவேனில் 127.2 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். இந்த நேரத்தில் வாங் இரண்டாவது இடத்தில் இருந்தார். 2018 ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற உலகக் கோப்பையில் நான்காவது இடத்தைப் பிடித்த இளவேனில், 10.7 புள்ளிகளுடன் தனது முன்னிலையைத் தக்க வைத்துக் கொண்டார். இருப்பினும், இதற்குப் பிறகு, சற்று தடுமாறிய இளவேனில் 9.8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு சரிந்து இறுதியில் வெண்கலப் பதக்கத்தையே கைப்பற்றினார்.

வெண்கல பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவன்:


முன்னதாக, ஆறு தொடர் தகுதிச் சுற்றுகளுக்குப் பிறகு, இளவேனில் 635.9 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். வாங் 637.9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். நார்வேயின் ஜேனட் ஹெக் டியூஸ்டாட் 635.7 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். வாங்கின் ஸ்கோர் தகுதிச் சுற்றில் உலக சாதனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில், யுன்ஜி 635.6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும், துருக்கியின் எலிஃப் பெர்ஃபின் அல்துன் 634.6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் சீனாவின் உலக மற்றும் ஆசிய சாம்பியனான ஹென் ஜியாயுய் 634.2 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்ற இந்திய வீராங்கனைகளின் செயல்பாடுகள்:

இந்தியாவின் மற்ற வீராங்கனைகளை பொறுத்தவரை தேசிய சாம்பியனான அனன்யா நாயுடு 632.4 புள்ளிகளுடன் 15வது இடத்தைப் பிடித்தார். இவருக்கு முன்னதாக ரமிதா ஜிண்டால் 632.6 புள்ளிகளுடன் 13வது இடத்தைப் பிடித்தார். மேக்னா சஜ்னர் மற்றும் ஆர்யா போர்ஸ் முறையே 25வது மற்றும் 60வது இடத்தைப் பிடித்தனர்.

கிட்னியை வரதட்சணையாக கேட்ட மாமியார்.. மருமகள் எடுத்த முடிவு
கிட்னியை வரதட்சணையாக கேட்ட மாமியார்.. மருமகள் எடுத்த முடிவு...
உணவு டெலிவரி ஊழியர்களுக்கு ஓய்வு அறை.. இவ்வளவு வசதிகளா?
உணவு டெலிவரி ஊழியர்களுக்கு ஓய்வு அறை.. இவ்வளவு வசதிகளா?...
நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்.. வெளுக்கப்போகும் கனமழை!
நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்.. வெளுக்கப்போகும் கனமழை!...
கோடையில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் அது நம் உடலை குளிர்விக்குமா?
கோடையில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் அது நம் உடலை குளிர்விக்குமா?...
எலும்புகள் பலவீனமடைவதற்கு என்ன காரணம்? எப்படி தவிர்ப்பது?
எலும்புகள் பலவீனமடைவதற்கு என்ன காரணம்? எப்படி தவிர்ப்பது?...
ஆர்சிபி அணியை வாங்குகிறாரா கர்நாடகா துணை முதல்வர்..?
ஆர்சிபி அணியை வாங்குகிறாரா கர்நாடகா துணை முதல்வர்..?...
மழை காலங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பது எப்படி?
மழை காலங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பது எப்படி?...
லார்ட்ஸில் அதிக ரன்கள்..! 99 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஸ்மித்!
லார்ட்ஸில் அதிக ரன்கள்..! 99 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஸ்மித்!...
முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன? தவிர்ப்பது எப்படி?
முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன? தவிர்ப்பது எப்படி?...
வாக்கிங் போக சிறந்த நேரம் எது? காலையா? மாலையா?
வாக்கிங் போக சிறந்த நேரம் எது? காலையா? மாலையா?...
குபேரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு...
குபேரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு......