Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

RCB For Sale: அதிக தொகைக்கு விலை நிர்ணயம்.. சாம்பியன் ஆர்சிபி விற்கப்படுகிறதா..?

IPL Team Sale: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் அணி, 2 பில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ. 17,000 கோடி) விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக அமையும். முன்னர், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான இந்த அணியை தற்போது டியாஜியோ நிர்வகிக்கிறது. 2008ல் 111.6 மில்லியன் டாலராக இருந்த அணியின் மதிப்பு, 13 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

RCB For Sale: அதிக தொகைக்கு விலை நிர்ணயம்.. சாம்பியன் ஆர்சிபி விற்கப்படுகிறதா..?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Jun 2025 17:43 PM IST

இந்தியன் பிரீமியர் லீக்கின் (Indian Premier League) 18வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விற்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியின் உரிமையாளராக மெக்டோவல்ஸ் விஸ்கியை தயாரிக்கும் யுனைடெட் ஸ்பிரிட் லிமிடெட்டிடம் (United Spirits Limited) உள்ளது. ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி, ஸ்பிரிட் லிமிடெட் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்க தயாராகி வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விற்கப்பட்டால், அது ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக இருக்கும்.

ஆர்சிபி அணி எவ்வளவு தொகைய்க்கு விற்கப்படும்..?

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 2 பில்லியன் டாலர்களுக்கு, அதாவது சுமார் ரூ. 17,000 கோடிக்கு விற்க முடிவு செய்துள்ளது. முன்னதாக, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் விஜய் மல்லையாவுக்கு சொந்தமானதாக இருந்தது. விஜய் மல்லையா கடன் பிரச்சனையில் சிக்கி கொண்டதால், இந்த நிறுவனத்தை இங்கிலாந்தின் டியாஜியோ வாங்கியது. அதன்படி, இப்போது டியாஜியோ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையாளராக உள்ளது.

2008ல் ஆர்சிபியின் விலை என்ன..?

கடந்த 2008ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டது. அந்தநேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மதிப்பு 111.6 மில்லியன் டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 476 கோடியாகும். கடந்த 2008ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2வது மிக விலையுயர்ந்த அணியாக இருந்தது. விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட் லிமிடெட் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு வரை சொந்தமாக இருந்தது. 2014 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் நிறுவனமான டியாஜியோ யுனைடெட் ஸ்பிரிட் லிமிடெட்டில் பார்ட்னராக இருந்தது. 2016ம் ஆண்டில் அந்த நிறுவனம் முழு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்கியது.

மிகப்பெரிய ஒப்பந்தம்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ. 17,000 கோடிக்கு விற்கப்பட்டால், அது ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக அமையும். இதற்கு முன்பு எந்த அணியும் இவ்வளவு அதிக விலைக்கு விற்கப்பட்டதில்லை. ஐபிஎல்லில் 2 புதிய அணிகள் வந்தபோது, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை ஆர்பிஎஸ்ஜி குழுமம் ரூ.7,090 கோடிக்கு வாங்கியது. சிவிசி கேபிடல் குஜராத் டைட்டன்ஸ் அணியை ரூ.5,625 கோடிக்கு வாங்கியது. தற்போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விற்கப்பட்டால், அது ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக இருக்கும். ஏனெனில் ஆர்சிபி உரிமையாளர் அணியின் விற்பனைக்கு பம்பர் விலையை நிர்ணயித்துள்ளனர்.