AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WTC 2025 Final: ஐசிசி டபிள்யூடிசி இறுதிப் போட்டி.. டெஸ்டில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இதுவரை எப்படி..?

South Africa vs Australia: 2025 ஜூன் 11 முதல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் WTC இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா மோதுகின்றன. இரு அணிகளும் 101 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன, ஆஸ்திரேலியா 54 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. கடைசி 10 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா 5 வெற்றிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. போட்டி இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும்.

WTC 2025 Final: ஐசிசி டபிள்யூடிசி இறுதிப் போட்டி.. டெஸ்டில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இதுவரை எப்படி..?
பாட் கம்மின்ஸ் Vs பவுமாImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Jun 2025 20:57 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 (ICC World Test Championship 2023-2025) இறுதிப்போட்டியானது நாளை அதாவது 2025 ஜூன் 11ம் தேதி முதல் லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா (Australia vs South Africa) இடையே நடைபெறுகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இந்த சுற்றில் தென்னாப்பிரிக்க அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வென்றது. அதேநேரத்தில், 2வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 19 போட்டிகளில் விளையாடி 13 போட்டிகளில் வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியடைந்தது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையே இதுவரை எத்தனை டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது..? கடந்த 10 போட்டிகளில் யார் முன்னிலை வகிக்கிறார்கள்..? யார் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

டெஸ்ட் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் எப்படி..?

ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 1902ம் ஆண்டு நடைபெற்றது. அன்று முதல் இன்று வரை இரு அணிகள் 101 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், ஆஸ்திரேலியா அணி 54 போட்டிகளில் வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதேநேரத்தில், தென்னாப்பிரிக்கா 26 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இருவருக்கும் இடையில் 21 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

கடந்த 10 போட்டிகளை பொறுத்தவரை தென்னாப்பிரிக்கா சற்று முன்னிலையில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 5 முறை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 4 முறை வென்றுள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா WTC இறுதி நேரம், தேதி, இடம்:

  • தேதி-  2025 ஜூன் 11 முதல் 2025 ஜூன் 15 வரை
  • ரிசர்வ் டே – ஜூன் 16
  • நேரம்- இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி
  • இடம்- லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்தியாவில் எங்கு பார்க்கலாம்..?

இந்தியாவில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் சேனல்களில் நேரடியாக காணலாம். செல்போனில் காண விரும்புவோர் ஜியோஹாட்ஸ்டாரில் கண்டு மகிழலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணி

தென்னாப்பிரிக்கா:

டோனி டி சோர்சி, ரியான் ரிக்கல்டன், ஐடன் மார்க்ரம், டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்காம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, டேன் பேட்டர்சன், சென்னூர் முதுசம், கேசவ் மகராஜ்.

ஆஸ்திரேலியா:

உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாசா, மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், பியூ வெப்ஸ்டர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், மாட் குஹ்னெமன்.

Follow Us