IPL 2026: முழு உடற்தகுதியுடன் தோனி.. அடுத்த போட்டியில் களம்.. சிஎஸ்கே ரசிகர்களை குஷிப்படுத்திய ஃபிளெமிங்!

MS Dhoni is Back: எம்.எஸ். தோனி தனது ஹைதராபாத் பயணம் குறித்த இறுதி முடிவை நாளை அதாவது 2026 ஏப்ரல் 16 ஆம் தேதி காலையில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவரது பங்கேற்பு குறித்த சஸ்பென்ஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். தோனி செல்ல முடிவு செய்தால், அவர் அங்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

IPL 2026: முழு உடற்தகுதியுடன் தோனி.. அடுத்த போட்டியில் களம்.. சிஎஸ்கே ரசிகர்களை குஷிப்படுத்திய ஃபிளெமிங்!

எம்.எஸ்.தோனி

Published: 

15 Apr 2026 16:48 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் நேற்று அதாவது 2026 ஏப்ரல் 15ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஐபிஎல் 2026 சீசனில் 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்தநிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியாக வருகின்ற 2026 ஏப்ரல் 18ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் எம்.எஸ். தோனி (MS Dhoni) இடம்பெற வாய்ப்புள்ளது. நேற்றைய கொல்கத்தாவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் செய்தியாளர்களை சந்தித்தபோது, எம்.எஸ். தோனி 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருப்பதாகவும், முழுத் தீவிரத்துடன் பயிற்சி செய்து வருவதாகவும் கூறினார்.

ALSO READ: சிஎஸ்கே போட்டியில் விதி மீறல்.. ரஹானே மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை!

முழு உடற்தகுதியுடன் எம்.எஸ்.தோனி:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி விளையாடுவது குறித்து பேசிய சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், “எம்.எஸ். தோனி தற்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். மேலும், முழு வீச்சில் பயிற்சி செய்து வருகிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் திரும்புவார் என நம்புகிறோம்” என்று கூறினார்.

ஹைதராபாத் செல்லுவாரா எம்.எஸ்.தோனி..?

எம்.எஸ். தோனி தனது ஹைதராபாத் பயணம் குறித்த இறுதி முடிவை நாளை அதாவது 2026 ஏப்ரல் 16 ஆம் தேதி காலையில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவரது பங்கேற்பு குறித்த சஸ்பென்ஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். தோனி செல்ல முடிவு செய்தால், அவர் அங்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், அவர் ஹைதராபாத் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால், ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் அவர் களத்தில் இறங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.

ALSO READ: ரோஹித்துக்கு குணமடையாத காயம்.. மும்பை அணியின் தொடக்க வீரர் யார்..?

தோனி இல்லாமல் சரிவில் இருந்து மீண்ட சிஎஸ்கே:

2026 தொடரின் மோசமான தொடக்கத்திற்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பெற்று மீண்டெழுந்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்திலும், அதைத் தொடர்ந்து கொல்கத்தா அணியை 32 ரன்கள் வித்தியாசத்திலும் சென்னை வீழ்த்தியது. 4 போட்டிகளுக்குப் பிறகு, அவர்கள் தற்போது புள்ளி அட்டவணையில் எட்டாவது இடத்தில் உள்ளனர். ஏப்ரல் 14ம் தேதியான நேற்று சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது அணியை அறிவித்தபோது, ​​தோனியின் பெயர் அதில் இடம்பெறவில்லை.

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி