Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bengaluru New Cricket Stadium: மோடி ஸ்டேடியத்திற்கு போட்டி.. பெங்களூருவில் உதயமாகும் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்! எவ்வளவு பட்ஜெட் தெரியுமா..?

Karnataka's Mega Cricket Stadium Project: கர்நாடக முதல்வர் சித்தராமையா, பெங்களூரில் பொம்மசந்திரா சூர்யா நகரில் 80,000 இருக்கைகள் கொண்ட உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இது புதிய மைதானமாக அமையும். கர்நாடக வீட்டு வசதி வாரியம் இந்த ₹1,650 கோடி திட்டத்திற்கு நிதியளிக்கும்.

Bengaluru New Cricket Stadium: மோடி ஸ்டேடியத்திற்கு போட்டி.. பெங்களூருவில் உதயமாகும் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்! எவ்வளவு பட்ஜெட் தெரியுமா..?
பெங்களூரு புதிய ஸ்டேடியம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Aug 2025 15:41 PM

கர்நாடகாவில் உள்ள பொம்மசந்திராவின் சூர்யா நகரில் 80,000 இருக்கைகள் கொண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துடன் (Bengaluru New Cricket Stadium) கூடிய உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வளாகத்தை கட்டும் திட்டத்திற்கு முதலமைச்சர் சித்தராமையா பச்சைக்கொடி காட்டி உள்ளார். அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய ஸ்டேடியம் கிடைக்கலாம். நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 9ம் தேதி உள்துறை அலுவலகமான கிருஷ்ணாவில் முதலமைச்சர் சித்தராமையாவிடம் (Siddaramaiah) கர்நாடக வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் ஸ்டேடியத்தின் செயல் விளக்கத்தை வழங்கினர். இந்த திட்டத்திற்கு கர்நாடக வீட்டுவசதி வாரியம் இந்த திட்டத்திற்கு முழுக்க முழுக்க நிதியளிக்கும். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு பிறகு, இந்தியாவின் 2வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக உருவெடுக்கும்.

பெங்களூரு புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் எப்போது தொடங்கப்படும்..?

பெங்களூருவில் கட்டப்படவுள்ள புதிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கான அடிக்கல் இன்னும் சில மாதங்களில் நாட்டப்படும். இந்த ஸ்டேடியம் கட்டி முடிக்கப்பட்டவுடன், இந்தியாவின் 2வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக உயர்ந்து நிற்கும். பெங்களூருவில் அமையவுள்ள ஸ்டேடியத்தில் 80,000 பார்வையாளர்கள் அமரும் வசதிக்கு திட்டமிடப்பட்ட நிலையில், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சுமார் 1,32,000 பார்வையாளர்களை கொண்ட திறன் கொண்டது.

ALSO READ: விராட் கோலியின் லேட்டஸ்ட் போட்டோவால் சர்ச்சை – கவலையில் ரசிகர்கள்!

ரூ. 1,650 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கு மாநில அரசின் எந்த நிதி உதவியும் இல்லாமல், கர்நாடக வீட்டுவசதி வாரியம் செலவில் கட்டப்படுகிறது. பொம்ம சந்திராவில் அமைக்கப்படவுள்ள புதிய ஸ்டேடியம் 100 ஏக்கர் நிலத்தில் கட்டப்படும். அதேநேரத்தில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் வெறும் 17 ஏக்கர் நிலப்பரப்பை மட்டுமே கொண்டது. மேலும், சின்னசாமி ஸ்டேடியத்தில் 32,000 இருக்கைகள் கொண்டதால், இதில் குறைந்த அளவிலான பார்வையாளர்களே அமர முடியும்.

அதிநவீன உடற்பயிற்சி கூடங்கள்:

பொம்மசந்திரா சூர்யா நகரில் 1,650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெகா விளையாட்டு வளாகம் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 8 உட்புற மற்றும் 8 வெளிப்புற விளையாட்டு அரங்கங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பயிற்சி வசதிகள், பெரிய நீச்சல் குளம், ஹோட்டங்கள் மற்றும் சர்வதேச நிகழ்வுகளுக்கான ஒரு அரங்கம் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏதேனும் வெற்றி விழா நடத்த திட்டமிடப்படால் இந்த அரங்கம் போதுமானதாக இருக்கும்.

துயர சம்பவம்:

ஐபிஎல் 2025ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி அணிவகுப்பின்போது, எம். சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததனர். மேலும், பலர் காயமடைந்தனர். கூட்ட நெரிசலின் விளைவாக, சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த டி20 மகாராஜா டிராபி மைசூருக்கு மாற்றப்பட்டது. தற்போது வரை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லீக் போட்டிகளையும், 2025 மகளிர் வேர்ல்ஸ் கோப்பையின் அரையிறுதி போட்டியையும் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடத்த அனுமதிக்கவில்லை.

ALSO READ: சஞ்சு சாம்சன் உள்ளே.. அஸ்வின் வெளியே.. சிஎஸ்கே அணியில் குழப்பம்!

இந்த துயர சம்பவத்திற்கு பிறகு, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா கமிஷன் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு பெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடியம் தகுதியற்றது என்று தெரிவித்தது.