IPL 2026: பயிற்சி அமர்வுகளில் இனி இது கிடையாது.. ஐபிஎல் அணிகளுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்ட பிசிசிஐ!

Practice Guidelines for IPL 2026 Season: ஐபிஎல் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. 2026 மார்ச் 11ம் தேதி, எதிர்பார்த்ததை விட ஒரு நாள் முன்னதாக, முதற்கட்ட அட்டவணையையும் பிசிசிஐ வெளியிட்டது.

IPL 2026: பயிற்சி அமர்வுகளில் இனி இது கிடையாது.. ஐபிஎல் அணிகளுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்ட பிசிசிஐ!

சிஎஸ்கே பயிற்சி அமர்வு

Published: 

13 Mar 2026 20:08 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனுக்கு (IPL 2026) முன்னதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 10 அணிகளும் விரிவான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் 2026 சீசன் 2026 மார்ச் 28ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. 2026 மார்ச் 11ம் தேதி, எதிர்பார்த்ததை விட ஒரு நாள் முன்னதாக, முதற்கட்ட அட்டவணையையும் பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி, பிசிசிஐ வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பாகிஸ்தான் வீரர் ஒப்பந்தம்.. எழுதப்படாத விதியை மாற்றிய காவ்யா மாறன்.. கிளம்பும் எதிர்ப்புகள்..!

தனித்தனி வலைகள்:

  • புதிய விதிகளின் கீழ், அணிகள் ஏற்கனவே மற்றொரு அணியால் பயன்படுத்தப்பட்ட பயிற்சி வலைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது. இரண்டு அணிகள் வெவ்வேறு நேரங்களில் பயிற்சி செய்யத் திட்டமிட்டாலும், முதல் அணி பயன்படுத்தும் வலைகள் இரண்டாவது அணிக்கு பயன்படுத்த அனுமதிக்க கூடாது.
  • ஒரு அணி தனது பயிற்சி அமர்வை முன்கூட்டியே முடித்தாலும், மற்றொரு அணி காலியாக இருந்தாலும் பயன்படுத்த அனுமதிக்கப்படாது. சமமான நிலைமைகளைப் பராமரிக்கவும், அணிகளுக்கு இடையே எந்தவிதமான தகராறு ஏற்படாமல் இருக்க இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • போட்டிக்கு முன்பு ஒவ்வொரு அணியும் விளையாடக்கூடிய பயிற்சி போட்டிகளின் எண்ணிக்கையை பிசிசிஐ வரம்பிட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக இரண்டு பயிற்சி போட்டிகளை விளையாட அனுமதிக்கப்படும், இதற்கு வாரியத்தின் முன் அனுமதி தேவைப்படும்.
  • ஃப்ளட்லைட் வெளிச்சத்தில் நடைபெறும் பயிற்சிப் போட்டிகளின் காலம் மூன்றரை மணி நேரத்திற்கு மேல் இருக்காது. இந்தப் போட்டிகள் பிரதான மைதானத்தில் நடைபெறாது. அதற்குப் பதிலாக, பயிற்சிக்காகத் தயாரிக்கப்பட்ட பயிற்சி பிட்ச்களில் மட்டுமே விளையாடப்பட வேண்டும்.
  • ஒரு அணியின் முதல் உள்ளூர் போட்டிக்கு நான்கு நாட்களுக்கு முன்பு வரை விளையாடும் மைதானத்தின் பிட்ச்களில் எந்த பயிற்சி அமர்வும் அல்லது பயிற்சி போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படாது. போட்டியின் போது இரு அணிகளுக்கு ஆடுகளம் புதிதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த விதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பயிற்சி அமர்வுகளை திட்டமிடும்போது சொந்த மைதானத்தின் அணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இரு அணிகளும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய விரும்பினால், ஒரு அட்டவணையில் உடன்பட முடியாவிட்டால், BCCI தலையிட்டு வெவ்வேறு பயிற்சி நேரங்களை ஒதுக்கும்.

ALSO READ: ஐபிஎல் 2026 சீசனுடன் தோனி ஓய்வு நிச்சயம்..? முன்னாள் சிஎஸ்கே வீரர் உறுதி..!

  • பயிற்சி அமர்வுகளின் போது கேட்டரிங் சேவைகள், மருத்துவ உதவி, பாதுகாப்பு மற்றும் பிற தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு சொந்த மைதானத்தின் அணியின் நிர்வாகத்தின் பொறுப்பு. இருப்பினும், எதிரணியின் பயிற்சியின்போது தங்களுக்கு தேவையான பானங்களை தாங்களே ஏற்பாடு செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு சிஎஸ்கேவும் ஆர்சிபியும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் விளையாடுகிறது என்றால், சிஎஸ்கே அணி அனைத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
Follow Us
போர் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம் - அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
அறிவு இல்லாமல் கீழ்த்தரமான… தன் மீதான விமர்சனத்துக்கு திரிஷா அதிரடி பதில்
தவறுதலாக ரூ.2 லட்சத்தை ஆற்றில் வீசிய குடும்பம்.. மீட்டுக் கொடுத்த தீயணைப்பு வீரர்கள்..
இந்தியாவில் முதல் நீதிமன்ற உத்தரவு: பாசிவ் யூத்தனேஷியாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்