Asia Cup 2025: சூர்யாகுமார் யாதவ் கேப்டன்..! கில்லுக்கு வாய்ப்பு.. 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

Asia Cup 2025 India Squad Announcement: 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் அணிக்கு கேப்டனாக இருப்பார் என்றும், சுப்மன் கில் துணை கேப்டனாக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

Asia Cup 2025: சூர்யாகுமார் யாதவ் கேப்டன்..! கில்லுக்கு வாய்ப்பு.. 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணி

Updated On: 

19 Aug 2025 15:36 PM

2025 ஆசியக் கோப்பைக்கான (2025 Asia Cup) இந்திய அணி (Indian Cricket Team) அறிவிக்கப்பட்டது. இந்த அணியை இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர். மேலும், துணை கேப்டனாக சுப்மன் கில் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  2025 சாம்பியன் டிராபி மற்றும் ஐபிஎல் 2025ல் சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், முகமது சிராஜ் நீக்கப்பட்டுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றி பிறகு, இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தலைமை ஏற்றார்.

சூர்யகுமார் யாதவ் கேப்டனாக ஆன பிறகு, இந்திய அணி இதுவரை எந்த டி20 தொடரையும் இழக்கவில்லை. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, 2025 ஆசியக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ALSO READ: ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம்.. இத்தனை வெற்றி கண்டதா இந்திய அணி..?

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:


சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித்  ராணா, ரிங்கு சிங்.

காத்திருப்பு வீரர்கள்: ரியான் பராக், துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர்

தொடக்க வீரர்களே பலம்:

2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் தொடக்க ஜோடியான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் மீது இந்திய தேர்வாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா டி20 தரவரிசையில் தற்போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் உள்ளார். மேலும், டி20 தரவரிசையில் உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேன் திலக் வர்மா உள்ளார். எனவே, அபிஷேக் மற்றும் திலக் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் டாப் ஆர்டரில் அங்கம் வகிக்கும் நிலையில், மிடில் ஆர்டரில் கேப்டன் சூர்யகுமார் யாதவ்,  ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் படேல், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் அசத்துவார்கள் என்று நம்பப்படுகிறது. அதேநேரத்தில், ஜிதேஷ் சர்மா அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ: 10 வினாடி விளம்பரத்திற்கு ரூ. 16 லட்சம் பணம்.. களைகட்ட தொடங்கிய 2025 ஆசியக் கோப்பை..!

பந்துவீச்சைப் பொறுத்தவரை, ஜஸ்பிரித் பும்ராவும், அர்ஷ்தீப் சிங்கும் வேகப்பந்து வீச்சை கவனித்து கொள்வார்கள். சுழற்பந்து வீச்சை வலுப்படுத்த வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆசிய கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முக்கிய வீரர்களுக்கு இடமில்லை:

இருப்பினும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் போன்ற முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.