AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. மோதப்போகும் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா.. பிட்ச் எப்படி..?

Australia vs South Africa: 2025 ஜூன் 11 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. லார்ட்ஸ் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். வானிலை முதல் நாள் சிறப்பாக இருக்கும் என்றாலும், மூன்றாம் நாள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளின் விளையாடும் லெவன் மற்றும் ஹெட்-டு-ஹெட் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. மோதப்போகும் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா.. பிட்ச் எப்படி..?
டெம்பா பவுமா Vs பாட் கம்மின்ஸ்Image Source: ICC
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Jun 2025 08:00 AM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (World Test Championship 2025) இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா (Australia vs South africa) இடையே நடைபெறுகிறது. இந்த போட்டி இன்று அதாவது 2025 ஜூன் 11ம் தேதி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தென்னாப்பிரிக்கா அணி முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், ஆஸ்திரேலிய அணி 2வது இடத்தை பிடித்து, நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்குகிறது. இந்தநிலையில் இரு அணிகளுக்கு இடையிலான பிளேயிங் லெவன், பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

லார்ட்ஸ் பிட்ச் ரிப்போர்ட் எப்படி..?

இங்கிலாந்தின் பெரும்பாலான ஆடுகளங்கள் எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். பந்து சீராகவும், அதிக ஸ்விங்குடன் காணப்படும். இதனால், பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க திணறுவார்கள். லார்ட்ஸ் பிட்சும் கிட்டத்தட்ட இதே போன்றுதான் இருக்கும். இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம். இங்கு, முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எட்டும் ஒரு அணியை தோற்கடிப்பது கடினம்.

வானிலை எப்படி..?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாளில் லண்டனில் வானிலை சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரியை எட்டினாலும், இடையில் மேகங்கள் கூடலாம். 2வது நாளில் ஆட்டம் சீராக நடைபெறும் என்று கூறப்பட்டாலும், போட்டியின் மூன்றாவது நாளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், அடிக்கடி மழை பெய்து போட்டி அடிக்கடி நிறுத்தப்படலாம்.

ஹெட் டூ ஹெட்:

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இதுவரை 101 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் ஆஸ்திரேலிய அதிகபட்சமாக 54 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 26 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இரு அணிகளுக்கு இடையே 21 போட்டிகள் டிரா செய்யப்பட்டுள்ளன.

பிளேயிங் லெவன்:

தென்னாப்பிரிக்கா விளையாடும் லெவன்:

ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரைன் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி

ஆஸ்திரேலியா விளையாடும் லெவன்:

உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்.

Follow Us