Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Australia vs England 1st Test: கம்மின்ஸ் காயம்.. கேப்டனாக ஸ்மித்.. ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து பிளேயிங் லெவன் எப்படி?

Australia vs England Playing 11: ஆஷஸ் தொடருக்கான தனது ஆடும் லெவன் ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது. முதல் டெஸ்டுக்கான அணியில் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக இல்லாத நிலையில்ம் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்துவார். 31 வயதான வேகப்பந்து வீச்சாளர் டாகெட் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.

Australia vs England 1st Test: கம்மின்ஸ் காயம்.. கேப்டனாக ஸ்மித்.. ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து பிளேயிங் லெவன் எப்படி?
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து பிளேயிங் லெவன்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Nov 2025 12:29 PM IST

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா (Australia vs England Test Series) இடையிலான ஆஷஸ் தொடரின் (Ashes Series) முதல் டெஸ்ட் போட்டியில் நாளை அதாவது 2025 நவம்பர் 21ம் தேதி முதல் தொடங்குகிறது. பெர்த்தில் தொடங்கும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பிரெண்டன் டாகெட் மற்றும் பேட்ஸ்மேன் ஜேக் வெதரால்ட் ஆகியோர் அறிமுகமாகவுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) உறுதிப்படுத்தியுள்ளது. பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் இருவரும் காயமடைந்துள்ளதால், 31 வயதான வேகப்பந்து வீச்சாளர் டாகெட் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இந்தநிலையில், ஆஷஸ் தொடருக்கான தனது ஆடும் லெவன் ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது. முதல் டெஸ்டுக்கான அணியில் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக இல்லாத நிலையில்ம் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்துவார். இந்தநிலையில், இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட்க்கான இரு அணிகளின் பிளேயிங் லெவன்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடர் எப்போது? ஹெட் டூ ஹெட் சாதனை எப்படி?

முதல் டெஸ்டுக்கான ஆஸ்திரேலியாவின் விளையாடும் பிளேயிங் லெவன்:


உஸ்மான் கவாஜா, ஜேக் வெதரால்ட், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், பிரெண்டன் டாகெட், ஸ்காட் போலண்ட்.

பெர்த் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியின் 12 பேர் கொண்ட அணி:


பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாக் க்ரௌலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், ஷோயப் பஷீர்.

ALSO READ: ஆஷஸ் தொடர் எப்படி தொடங்கியது..? அதன் வரலாறு என்ன..?

ஆஷஸ் தொடருக்கான இடம் மற்றும் அட்டவணை:

  • 1வது டெஸ்ட், 2025 நவம்பர் 21 – பெர்த், காலை 8:00 IST
  • 2வது டெஸ்ட், 2025 டிசம்பர் 4 – பிரிஸ்பேன், காலை 9:30 IST
  • 3வது டெஸ்ட், 2025 டிசம்பர் 17 – அடிலெய்டு, காலை 5:30 IST
  • 4வது டெஸ்ட், 2025 டிசம்பர் 26 – மெல்போர்ன், காலை 5:30 IST
  • 5வது டெஸ்ட், 2026 ஜனவரி 4 – சிட்னி, 5:30 AM IST