இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றுள்ள நிகழ்வை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த உற்சாகத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா தனது காதல் கணவர் பாலேஷ் முச்சலை திருமணம் செய்ய உள்ளார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங்கில் இருந்து வரும் நிலையில், இந்த மாதம் அவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது.