ஐபிஎல் போட்டியில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்த பதினான்கு வயதேயான பாஸ் பேபி என்று செல்லமாக அழைக்கப்படும் ‘வைபவ் சூர்யவான்ஸி’, அந்த அசத்தலான இன்னிங்ஸில் பயன்படுத்தியது ஒரு சிறப்பு பேட் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பேட்டை அவருக்கு பரிசாக வழங்கியவர் டி டுவண்டி உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் உறுப்பினர், மற்றும் ராஜஸ்தான் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன்.