Ajinkya Rahane: இந்திய அணியில் மீண்டும் விளையாட ஆசை.. ஏமாற்றத்துடன் பேசிய அஜிங்க்யா ரஹானே..!

Ajinkya Rahane Comeback: முன்னாள் இந்திய டெஸ்ட் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட ஆர்வம் கொண்டுள்ளார். 2023க்குப் பிறகு இந்திய அணியில் இடம் பெறாத அவர், டெஸ்ட் கிரிக்கெட் குறித்து தேர்வாளர்களுடன் பேசியதாகவும், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Ajinkya Rahane: இந்திய அணியில் மீண்டும் விளையாட ஆசை.. ஏமாற்றத்துடன் பேசிய அஜிங்க்யா ரஹானே..!

அஜிங்க்யா ரஹானே

Published: 

13 Jul 2025 20:47 PM

இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane), நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். ரஹானே இந்திய அணிக்காக கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு களமிறங்கினார். தற்போது, இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு (India – England Test Series) இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில், அஜிங்க்யா ரஹானே ஒரு பெரிய அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, மீண்டும் ஒருமுறை இந்திய அணிக்காக விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். ரஹானே இதுவரை தனது டெஸ்ட் வாழ்க்கையில் 5000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஆனால் நீண்ட காலமாக இந்திய அணியில் இருந்து விலகிய பிறகும், ரஹானே மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று நம்புகிறார்.

என்ன சொன்னார் அஜிங்க்யா ரஹானே..?

லார்ட்ஸ் டெஸ்டின்போது ஸ்கை ஸ்போர்ட்ஸிடம் பேசிய முன்னாள் இந்திய அணியின் துனை கேப்டன் ரஹானே, ” லாட்ர்ஸ் ஸ்டேடியத்தில் இங்கே இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இன்னும் டெஸ்ய் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் என்றால் பைத்தியம். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் என்பது கவனம் செலுத்தி கட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட்டை விளையாடுவது பற்றியது.

உண்மையை சொல்ல போனால், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது குறித்து தேர்வாளர்களிடமும் பேசினேன். ஆனால், எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் பிடிக்கும்.” என்று தெரிவித்தார்.

ALSO READ: சாரா டெண்டுல்கருடன் காதலா..? பொதுவெளியில் வெளிப்படையாக பேசிய சுப்மன் கில்

ரஹானே இப்போது என்ன செய்கிறார்..?


சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், அஜிங்க்யா ரஹானே உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். கடந்த 2025 ரஞ்சி டிராபி சீசனில் மும்பை அணிக்கு தலைமை தாங்கி அரையிறுதி வரை அழைத்து சென்றார். அந்த ரஞ்சி சீசனில் ரஹானே இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 467 ரன்கள் எடுத்துள்ளார். இப்படியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. நம்பிக்கயை தளரவிடாத 37 வயதான அஜிங்க்யா ரஹானே இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாமல் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

ALSO READ: 12 ஆண்டுகளில் முதல் முறை.. இவர் இல்லாமல் டெஸ்டில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி!

அஜிங்க்யா ரஹானே இதுவரை இந்தியாவுக்காக 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 38.46 சராசரியில் 12 சதங்கள், 16 அரைசதங்களுடன் 5077 ரன்கள் எடுத்துள்ளார்.