விராட் கோலியின் தொடர் சதங்கள் – நொடியில் விற்றுத்தீர்ந்த 3வது போட்டிக்கான டிக்கெட்டுகள் – எகிறும் எதிர்பார்ப்பு
3rd ODI sold-out : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி அடுத்தடுத்து 2 சதங்களை அடித்து அசத்தினார். இதனால் அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதால், விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில விநாடிகளில் விற்றுத் தீர்ந்தன.

விராட் கோலி
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (South Africa) தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகள், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் (Virat Kohli) தொடர்ச்சியான இரண்டு சதக்கங்கள் காரணமாக சில நிமிடங்களுக்குள்ளே முற்றிலும் விற்றுத் தீர்ந்துள்ளன. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும், ஒவ்வொரு அணியும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இதன் காரணமாக, இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒரு நாள் போட்டியைக் காண ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் விராட் கோலி. கடந்த 2 போட்டிகளிலும் விராட் கோலி தொடர்ச்சியாக 2 சதங்களை அடித்து அசத்திய நிலையில், அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ராஞ்சி மற்றும் ராய்பூரில் கோலியின் அதிரடி
தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி தனது பழைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக ராஞ்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் 120 பந்துகளை எதிர்கொண்ட அவர் 135 ரன்களை குவித்து அந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இந்தப் போட்டியில் அவர் அடித்த சதம் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்து புதிய வரலாறு படைத்தார். அதனைத் தொடர்ந்து ராய்பூரில் நடைபெற்ற 2வது ஒருநாறள் போட்டியிலும் 93 ரன்களில் 103 ரன்களை குவித்து தனது பார்ஃமை நிரூபித்தார்.
இதையும் படிக்க : Indian Cricket Team Jersey: 2026 டி20 உலகக் கோப்பைக்கு புது ப்ளான்.. இந்திய அணிக்கு நியூ ஜெர்சி அறிமுகம்!
அவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தாங்கள் பழைய விராட் கோலியை பார்த்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர். அவர் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அவரது வெறித்தனமான ஆட்டத்தைக் காண ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்திருக்கறது. இதன் ஒரு பகுதியாக டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்துள்ளன.
இதுகுறித்து ஆந்திர மாநில கிரிக்கெட் ஆசோசியேஷன் அதிகாரி வெங்கடேஷ் என்பவர் அளித்த தகவலின் படி, இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது போட்டிக்கான முதற்கட்ட டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்த போது ரசிகர்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ராஞ்சியில் விராட் கோலி அடித்த சதத்திற்கு பிறகு இரண்டாம் மற்றும் மூன்றம் கட்ட டிக்கெட்டுகள் சில விநாடிகளில் முழுமையாக விற்றுத் தீர்ந்தன.
இதையும் படிக்க : IND vs SA: டி20யில் களமிறங்கும் சுப்மன் கில்.. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!
ஆரம்பத்தில் டிக்கெட் விற்பனை மெதுவாக இருந்தது. ஆனால் கோலியின் சதக்கத்துக்குப் பிறகு ஒரே கட்டமாக அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுப் தீர்ந்தன என்றார். ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1,200 முதல் 18,000 ரூபாய் வரை இருந்தபோதிலும், ரசிகர்கள் கோலியை நேரில் காண ஆர்வத்துடன் அனைத்து டிக்கெடடுகளையும் வாங்கி விட்டனர்.