Riyan Parag: தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள்.. மிரட்டிய ரியான் பராக்.. கிறிஸ் கெயில் சாதனை முறியடிப்பு!
6 Sixes in a Row: ஐபிஎல் 2025ன் 53வது போட்டியில், ரியான் பராக் கொல்கத்தாவுக்கு எதிராக தொடர்ச்சியாக ஆறு சிக்சர்களை அடித்து சாதனை படைத்தார். இது ஒரு ஓவரில் அல்ல, இரண்டு ஓவர்களில் அடுத்தடுத்து அடிக்கப்பட்டது. இதன் மூலம் கிறிஸ் கெயில், யுவராஜ் சிங் உள்ளிட்டோரின் சாதனையை சமன் செய்தார்.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 53வது போட்டியில் நேற்று அதாவது 2025 மே 5ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் ரியான் பராக், இந்தியன் பிரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஐபிஎல் 2025ல் ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸூக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரியான் பராக் (Riyan Parag) இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தினார். தற்போது இந்த குறித்தான சாதனை விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்:
மொயீன் அலி வீசிய 13வது ஓவரின் இரண்டாவது பந்து முதல் அந்த ஓவர் முடியும் வரை தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை ரியான் பராக் விளாசினார். தொடர்ந்து, அடுத்த ஓவர் வீசிய வருண் சக்கரவர்த்தியின் 2வது பந்தில் ஸ்ட்ரைக் வந்த ரியான் பராக் மீண்டும் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து ஒரு ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட ராஜஸ்தான் அணியின் தற்காலிக கேப்டன் ரியான் பராக், கிறிஸ் கெய்ல், கீரோன் பொல்லார்ட் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரை முறியடித்தார். இவர்கள் அனைவரும் ஐபிஎல்லில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்கள் அடித்திருந்தனர்.
யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்தாரா ரியான் பராக்..?
ரியான் பராக் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்திருந்தாலும், முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை அவரால் முறியடிக்க முடியவில்லை. ஏனெனில், ரியான் பராக் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடிக்கவில்லை, மாறாக 2 ஓவர்களில் தான் சந்தித்த 6 பந்துகளில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
ரியான் பராக் அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள் அடுத்த காட்சி:
𝙍𝙖𝙢𝙥𝙖𝙣𝙩 𝙍𝙞𝙮𝙖𝙣 🔥
The #RR captain is in the mood tonight 😎
He keeps @rajasthanroyals in the game 🩷
Updates ▶ https://t.co/wg00ni9CQE#TATAIPL | #KKRvRR | @rajasthanroyals | @ParagRiyan pic.twitter.com/zwGdrP3yMB
— IndianPremierLeague (@IPL) May 4, 2025
ஐபிஎல்லில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:
- கிறிஸ் கெயில் – கடந்த 2012ம் ஆண்டு புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சர்மாவின் ஒரே ஓவரில் கிறிஸ் கெய்ல் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
- ராகுல் தெவாட்டியா – கடந்த 2020ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் எஸ். காட்ரெல்லின் ஒரே ஓவரில் ராகுல் தெவாட்டியா தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
- ரவீந்திர ஜடேஜா – கடந்த 2021ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய மிதவேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேலின் ஒரு ஓவரில் ரவீந்திர ஜடேஜா ஐந்து சிக்ஸர்கள் அடித்தார்.
- ரிங்கு சிங்- கடந்த 2023ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளின் ஒரு ஓவரில் ரிங்கு சிங் அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள் அடித்தார்.