பலரும் ஜப்பானை அதன் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் நவீன நகரங்களை காணச் செல்கிறார்கள். ஆனால், முடி இல்லாதவர்கள் அல்லது குறைந்த முடி உள்ளவர்களை அதிகமாக ஈர்க்கும் ஒரு தனித்துவமான இடமும் அங்கே உள்ளது. அது கியோட்டோவில் உள்ள மிகாமி திருத்தலம். இந்த ஆலயம் முழுக்க முழுக்க முடியின் ஆரோக்கியம், வளர்ச்சி மற்றும் அழகு என்பவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. டோரோக்கோ அராஷியாமா நிலையம் அருகே அமைந்துள்ள இந்த சிறிய ஷிண்டோ ஆலயத்தில், மக்கள் அழகான, அடர்த்தியான முடிக்காகவும் முடி உதிர்வு தீர்விற்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள்.