2026 ஆம் ஆண்டின் முதல் ஏலத்தில், டோக்கியோவின் புகழ்பெற்ற டோயோசு மீன் சந்தையில் 535 பவுண்ட் எடையுள்ள ஒரு மாபெரும் ப்ளூஃபின் டூனா சுமார் 29 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி, புத்தாண்டு ஏல வரலாற்றில் மிக உயர்ந்த விலையை பதிவு செய்தது. இந்த அரிய மீனை ஜப்பானின் பிரபல ‘சுஷி ஸான்மை’ உணவக சங்கிலியின் உரிமையாளரான கியோஷி கிமுரா தலைமையிலான கியோமுரா கார்ப்பரேஷன் வாங்கியது. 2019 ஆம் ஆண்டில் அவர் 19 கோடிக்கு டூனா வாங்கியிருந்த சாதனையையும் இம்முறை முறியடித்துள்ளார்.