U19 Asia Cup 2025: U19 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி எப்போது..? இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதலா?

India vs Pakistan Final: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையின் தனது குழுவில் முதலிடத்தில் உள்ள இந்தியா, இலங்கையை தோற்கடித்து, மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் வங்கதேச எதிர்த்து வெற்றி பெற்றால், இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். இதனை தொடர்ந்து, 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை 2025ன் இறுதிப் போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 21ம் தேதி நடைபெற உள்ளது.

U19 Asia Cup 2025: U19 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி எப்போது..? இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் மோதலா?

இந்தியா U19 Vs பாகிஸ்தான் U19

Published: 

18 Dec 2025 13:30 PM

 IST

2025 ஆசிய கோப்பையில் கடந்த 2025 செப்டம்பர் 28ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை, சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போது, சரியாக ​​81 நாட்களுக்குப் பிறகு, அதே ஸ்டேடியத்தில் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் மற்றொரு ஆசிய கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. ஆயுஷ் மத்ரேவின் தலைமையிலான இந்தியா 19 வயதுக்குட்பட்டோர் ஆசிய கோப்பை பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ளது. அதுவும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதன்படி, 19 வயதுக்குட்பட்டோர் ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் (IND U19 vs PAK U19) மோத வாய்ப்பு இருப்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: கடும் பனி.. டாஸ் போட தாமதம்.. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4வது டி20 ரத்து..!

19 வயதுக்குட்பட்டோர் ஆசிய கோப்பை அரையிறுதியில் யார் யார் மோதல்..?

2025ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைக்கான முதல் அரையிறுதியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்ளும். அதே நேரத்தில், நடப்பு சாம்பியனான வங்கதேசம் 2வது அரையிறுதியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும். இந்த 2 அரையிறுதிப் போட்டிகளும் நாளை அதாவது 2025 டிசம்பர் 19ம் தேதி நடைபெறுகிறது.

இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் எப்படி மோதும்?

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையின் தனது குழுவில் முதலிடத்தில் உள்ள இந்தியா, இலங்கையை தோற்கடித்து, மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் வங்கதேச எதிர்த்து வெற்றி பெற்றால், இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். இதனை தொடர்ந்து, 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை 2025ன் இறுதிப் போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 21ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் அரையிறுதியில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் மோதலாம்.

2025 U19 ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் எத்தனை முறை மோதும்?

2025ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால், ​​ஒரு வாரத்திற்குள் இரு அணிகளும் இரண்டாவது மோதலாக மோதும். இரு அணிகளும் இதற்கு முன்பு, கடந்த 2025 டிசம்பர் 14ம் தேதி லீக் ஸ்டேஜ் போட்டிகளில் மோதின. அந்தப் போட்டியில், இந்தியா பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46.1 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஆரோன் ஜார்ஜ் 85 ரன்களும், கனிஷ்க் சவுகான் 46 ரன்கள் எடுத்தார்.

ALSO READ: ஒரு பந்து கூட வீசவில்லை.. ரத்தான இந்திய போட்டி.. ஆதங்கத்தில் ரசிகர்கள்..!

பதிலுக்கு, 241 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா தரப்பில் கனிஷ்க் சவுகான் மற்றும் தீபேஷ் தேவேந்திரன் தலா 3  விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேநேரத்தில், கிஷன் சிங் 2 விக்கெட்டுகளையும், வைபவ் சூர்யவன்ஷி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?