Asia Cup 2025: ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி எப்படி இருக்கும்..? யாருக்கு தலைமை பொறுப்பு..?
India Asia Cup 2025 Prediction: 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் கணிப்பு மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமைப் பதவியைப் பற்றிய விவாதங்களை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. 2026 டி20 உலகக் கோப்பைக்கான தயாரிப்புக்காக புதிய வீரர்களைச் சோதிப்பது, அனுபவ வீரர்களின் பணிச்சுமையைக் கையாள்வது போன்ற முக்கிய அம்சங்களை விவரிக்கிறது.

சூர்யகுமார் யாதவ்
2025 ஆசியக் கோப்பைக்கான (Asia Cup 2025) இந்திய அணி (Indian Cricket Team) வருகின்ற 2025 ஆகஸ்ட் 19ம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை ஆசியக் கோப்பையானது டி20 வடிவத்தில் நடைபெறுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2025 ஆசியக் கோப்பை வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி முதல் தொடங்கும் நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியில் வருகின்ற 2025 செப்டம்பர் 10ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு எதிராக களமிறங்குகிறது. இதன்பிறகு, மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையிலான போட்டியானது வருகின்ற செப்டம்பர் 14ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. லீக் ஸ்டேஜின் 3வது போட்டியில் இந்திய அணி, 2025 செப்டம்பர் 19ம் தேதி ஓமனுக்கு எதிராக விளையாடும். இந்தநிலையில், 2025 ஆசியக் கோப்பையில் களமிறங்கும் இந்திய அணி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: ஆசியக் கோப்பையை அதிக முறை வென்ற அணி எது..? முதலிடத்தில் கெத்துக்காட்டும் இந்தியா!
2026 டி20 உலகக் கோப்பைக்கு முக்கியத்துவம்:
2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான வலுவான அணியை உருவாக்கும் முயற்சியில் இந்திய அணி, 2025 ஆசியக் கோப்பையை தீவிரமாக எடுத்துக்கொள்ளும். புதிய வீரர்களை பரிசோதித்து வெற்றி வேகத்தை தக்க வைத்துகொண்டு, அணியை சமநிலையுடன் வைத்திருக்க தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் திட்டமிட்டுள்ளார். அதன்படி, திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா போன்ற வீரர்களை சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்தும் வகையில் ஆசியக் கோப்பை சிறந்த முயற்சியாகும்.
அதேபோல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா போன்ற அனுபவ வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பதும், காயத்தை தடுப்பதற்கும் இந்த சோதனை மிக முக்கியமானதாக இருக்கும்.
யார் கேப்டன்..?
2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் தலைமை பொறுப்பு சூர்யகுமார் யாதவிற்கு வழங்கப்படலாம். அதிரடியான ஆட்டத்திற்கும், அழுத்தத்தின் கீழ் அமைதியாக கையாள்வது போன்றவை சூர்யகுமார் யாதவை நம்பகமான நபராக மாற்றியுள்ளது. மேலும், இவரது தலைமையின் கீழ் கடந்த சில மாதங்களாக இந்திய இளம் அணி டி20 போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
சூர்யகுமார் தான் கேப்டன் பதவிக்கு சிறந்த தேர்வாக இருந்தாலும், 2026 டி20 உலகக் கோப்பைக்கு இளைய தலைவரை தயார்படுத்த விரும்பினால், அணி நிர்வாகம் ஹர்திக் பாண்ட்யாவுக்கு வழங்கலாம்.
ALSO READ: இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது…? யாருடன்..? முழு விவரம் இதோ!
2025 ஆசியக் கோப்பைக்கான கணிக்கப்பட்ட இந்திய அணி விவரம்:
🚨 INDIA’S PREDICTED SQUAD FOR ASIA CUP 2025 🚨 (Wisden).
– Abhishek, Tilak, Surya (C), Shubman, Rinku, Samson, Jitesh, Hardik, Axar, Sundar, Dube/Nitish, Bumrah, Arshdeep, Siraj/Prasidh, Varun. pic.twitter.com/4MiIe6ST6h
— Tanuj (@ImTanujSingh) August 16, 2025
அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே/நிதிஷ்குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்/பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.