Year Ender 2025: கிரகணங்கள் முதல் புனித யாத்திரை வரை.. 2025ன் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள் ஒரு பார்வை!!
Yearender 2025: ராமாயண மாநாடு முதல் மகாகும்பமேளா வரை, ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை முதல் ராமர் கோவில் கொடி ஏற்ற விழா வரை 2025ல் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் இந்திய சமூகத்தின் மத நம்பிக்கைகள், பாதுகாப்பு சவால்கள் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை பிரதிபலித்தன.
2025ஆம் ஆண்டு தீவிரமான மத நடவடிக்கைகள், முக்கிய திருவிழாக்கள், அரிய வானியல் நிகழ்வுகள் மற்றும் நாடு தழுவிய விவாதங்களைத் தூண்டிய பல சோகமான சம்பவங்களால் நிரைந்திருந்தன. இந்த ஆண்டில் நடந்த பெரும் திருவிழாக்கள், கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற யாத்திரைகள், அரிய விண்வெளி நிகழ்வுகள் ஆகியவை ஒருபுறம் மக்களின் ஆன்மீக உணர்வுகளை எழுச்சியடையச் செய்தன. அதே நேரத்தில், சில துயரச் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த விவாதங்களையும் உருவாக்கின. அவற்றில், பெரிய யாத்திரைகள் முதல் குறிப்பிடத்தக்க ஆன்மீக விழாக்கள் வரை, இந்த ஆண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க சில முக்கிய மத நிகழ்வுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
Also Read : காலை நேரத்தில் கண்ணாடி உடைந்தால் என்ன அர்த்தம்… வாஸ்து சொல்வதென்ன?
உலக ராமாயண மாநாடு:
ஜபல்பூரில் ஜனவரி 2ம் தேதி முதல் 4ஆம் தேதி வரை நான்காவது உலக ராமாயண மாநாடு நடைபெற்றது. இது, ஸ்ரீ ராமரின் கொள்கைகள் மற்றும் ராமாயணத்தின் உலகளாவிய மனிதநேய செய்தியை மையமாகக் கொண்டு நடைபெற்றது.
மகாகும்பமேளா மற்றும் நெரிசல் விபத்து:
உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகாகும்பமேளா விழா நடைபெற்றது. இந்த காலத்தில் சுமார் 66 கோடி பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர். ஆனால், ஜனவரி 29 (மௌனி அமாவாசை) அன்று சங்கமம் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
டெல்லி ரயில் நிலைய நெரிசல் விபத்து:
பிப்ரவரி 15ம் தேதி இரவு 9.26 மணியளவில்,டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கும்பமேளாவுக்கு சென்ற யாத்திரிகர்கள் ஆவார்கள். அதே நாளில், பிரயாக்ராஜ் நோக்கி சென்ற யாத்திரிகர்களை ஏற்றிய ஒரு SUV வாகனம் பேருந்துடன் மோதியதில், அதிலிருந்த 10 பயணிகளும் உயிரிழந்தனர்.
அரிய வானியல் நிகழ்வுகள்:
2025ஆம் ஆண்டில் நான்கு கிரகணங்கள் நிகழ்ந்தன. அதில், சந்திர கிரகணம்: மார்ச் 14 மற்றும் செப்டம்பர் 7ம் தேதியும், சூரிய கிரகணம் மார்ச் 29 மற்றும் செப்டம்பர் 21ம் தேதியும் நிகழ்ந்தன. மேலும், ஏழு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரிசையாக தோன்றும் ‘Planet Parade’ என்ற அரிய நிகழ்வு ஜனவரி 21 முதல் 25ம் தேதி வரையும், பின் பிப்ரவரி 28ம் தேதியும், இறுதியாக மார்ச் 8ம் தேதியும் காணப்பட்டது. இத்தகைய கோள்களின் அணிவகுப்பு மீண்டும் 396 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிகழக்கூடும் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.
ஜெகநாதர் கோயில் மர்ம நிகழ்வுகள்:
ஏப்ரல் 14ம் தேதியன்று ஜெகநாதர் கோயிலின் உச்சியில் ஏற்றப்பட்டிருந்த கொடியை ஒரு பறவை எடுத்துச் சென்ற ஒரு ஆச்சரியமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோதிடர்கள் இதை தீய அறிகுறி எனக் குறிப்பிட்டனர். மேலும் அதைத்தொடர்ந்து, நடந்த சில சம்பவங்களால் கவலைகள் அதிகரித்தன. ஜூன் 14 அன்று துறவி அச்சுதானந்த மகாராஜின் இருக்கைக்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்து, வடக்கு வாயிலுக்கு அருகில் பறவைகள் வழக்கத்திற்கு மாறாகக் கூடியது ஆகியவை ஆகும். அதன் பிறகு, இந்தியாவில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்துர் மற்றும் அகமதாபாத் விமான விபத்து ஆகியவை நிகழ்ந்தன. இது ஒருவித அபாய உணர்வை மேலும் தீவிரப்படுத்தியது.
ஜெகன்நாதர் ரத யாத்திரை:
பூரியில் ஜூன் 27 முதல் ஜூலை 5 வரை நடைபெற்ற புகழ்பெற்ற ரத யாத்திரையில் இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர். மோட்சம் அளிக்கும் என்று நம்பப்படும் இந்த புனித யாத்திரையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்க, ஜெகன்நாதர், பலபத்ரர் மற்றும் சுபத்ரா ஆகியோர் தங்கள் பிரம்மாண்டமான தேர்களில் பவனி வந்தனர்.
வைஷ்ணோ தேவி நிலச்சரிவு:
ஆகஸ்ட் 25ம் தேதி காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் செல்லும் பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தமிழர் ஒருவர் உயிரிழந்தார். இதன் காரணமாக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது யாத்திரை வழித்தடங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நாடு தழுவிய விவாதத்தை ஏற்படுத்தியது.
வெங்கடேஸ்வர சுவாமி கோயில்:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கூட்டநெரிசலில் சிக்கி 9 பக்தர்கள் பலியாகினர். ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோயிலில் அண்மையில் ஏகாதசி மற்றும் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த நிலையில், கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க : உங்கள் காரில் விநாயகர் சிலை வைத்துள்ளீர்களா?.. அப்போ கண்டிப்பா இதை செய்யுங்கள்!!
ராமர் கோவில் கொடியேற்றம்:
இந்த ஆண்டின் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மத நிகழ்வுகளில் ஒன்றாக, 2025 நவம்பர் 25 அன்று, ராமர் கோயிலின் மிக உயரமான கோபுரத்தின் மீது சடங்குகளுடன் கூடிய தர்மக் கொடி ஏற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து வந்த துறவிகள் ஆகியோர் முன்னிலையில், இந்தக் கொடியேற்றும் விழாவைத் தாமே முன்னின்று நடத்தினார்.