Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கார்த்திகை தேய்பிறை சஷ்டி.. உங்கள் பிரச்சினைகள் பறந்தோட இதை செய்யுங்கள்!!

ஆகாயத்தில் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளில் வரும் சஷ்டி - அதனால் இதற்கு கார்த்திகை சஷ்டி என்று பெயர். அசுரர்களான சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் போன்றவர்களை முருகன் இந்த நாளில் வென்றார். அதனால் இந்த நாள் “சூரசம்ஹாரம் நாள்” என்றும் கருதப்படுகிறது. தீமையை வென்று தர்மத்தை நிலைநிறுத்திய நாளாகும்.

கார்த்திகை தேய்பிறை சஷ்டி.. உங்கள் பிரச்சினைகள் பறந்தோட இதை செய்யுங்கள்!!
முருகப்பெருமான்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 10 Dec 2025 14:59 PM IST

சஷ்டி என்பது ஒவ்வொரு சந்திரமாதத்திலும் வரும் ஆறாம் திதி ஆகும். முருகன், சஷ்டி திதியிலேயே திருமேனியில் அவதரித்தார் என்று ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது. அதனால், ஒவ்வொரு சஷ்டி நாளும் முருகனைப் புகழும் நாளாகக் கருதப்படுகிறது. தேய்பிறை சஷ்டி, குறிப்பாக, பழைய பாவங்களை நீக்கி, மனக்கவலைகளைத் தீர்த்து, புத்துணர்ச்சி அளிக்கும் நாளாக கருதப்படுகிறது. தமிழர் பண்பாட்டில் கார்த்திகை மாதம் முழுவதும் தெய்வீக ஒளியின் காலமாக போற்றப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை சஷ்டி முருக பக்தர்களுக்குப் பெரும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

Also Read : பாதி வாளி நீர்.. குளியலறை முடி.. பாத்ரூமில் கவனிக்க வேண்டிய வாஸ்து விஷயங்கள்!

முருகனின் பிறப்பும், தீப விளக்கின் ஒளியும்:

முருகனின் பிறப்பும், தீப விளக்கின் ஒளியும் பக்தி, விரதம், தியானத்தின் மாதமும், இந்த மாதத்திலுள்ள தேய்பிறை சஷ்டி, முருகனுக்கு வெற்றி, அருள், காப்பு அளிக்கும் நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் முருகன் அசுர சக்திகளை வென்றதாக கூறப்படுகிறது. ஆகையால் பக்தர்கள் இந்த நாளை சூரசம்ஹாரம் நினைவு தினம், தீயை வெற்றி கொள்ளும் நாள் நல்லது வெற்றி பெறும் நாள் என்று கொண்டாடுகிறார்கள்.

காலை, மாலை ஜெபம்:

இந்த நாளில் பக்தர்கள் காலையில், மாலையில் அபிஷேகம், பூஜை கந்த சஷ்டி கவசம் பாடல், ஓம் சரவணபவா ஜெபம், பால், பன்னீர், இளநீர் அபிஷேகம், கோவிலில் அரவாணி தரிசனம், விரதம் (உண்ணாவிரதம் / எளிய உணவு) உள்ளிட்டவற்றை பல குடும்பங்கள் இதை குடும்ப பழக்கமாக தொடர்ந்து செய்து வருகிறார்கள். முருகனுக்கு சிவப்பு நிறம் மிகப் பிரியமானது. ஆகவே செம்பருத்தி, செந்தாமரை போன்ற சிவப்பு பூக்களைச் சமர்ப்பிக்கலாம்.

விரதம் இருப்பதால் மன அமைதி பெறலாம்:

சஷ்டி விரதம் இருப்பதன் மூலம் மன அமைதி, உடல் ஆரோக்கியம், குடும்பத்தில் சந்தோஷம், வேலை, வியாபாரம், குழந்தைப்பேறு ஆசை நிறைவேறுதல் உள்ளிட்ட தடைகள் நீங்கி வெற்றி பெற வழிவகுக்கும். குறிப்பாக கண் பார்வை குறைவு, நரம்பு பிரச்னைகள் போன்ற நோய்கள் முருகன் அருளால் தீரும் என்று பலர் நம்புகின்றனர். சிலர் இன்று விரதமிருந்து பால், பழம், தண்ணீர் மட்டும் உட்கொள்வர். விரதத்தின் நோக்கம் உடலை பற்றியது அல்ல; மனதை பற்றியது. சிந்தனையில் அமைதி மற்றும் பக்தி நிலைபெறுவதே உண்மையான விரதம்.

Also Read : காலை நேரத்தில் கண்ணாடி உடைந்தால் என்ன அர்த்தம்… வாஸ்து சொல்வதென்ன?

மனக்கவலை நீங்கும்:

அதோடு, தேய்பிறை சஷ்டி அன்று முருகனை வழிபட்டால், மனக்கவலைகள், தடைகள், எதிர்மறை சிந்தனைகள் நீங்கும். குடும்ப அமைதி மற்றும் ஆரோக்கியம் வளர்ச்சி பெறும். வேலை, தொழில், கல்வி போன்ற துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் விரைவில் நிறைவேறும். உள்ளத்தில் தைரியம், நம்பிக்கை, ஆனந்தம் பெருகும்.