ஆர்ட் ஆஃப் லிவிங் 45வது ஆண்டு விழா: பிரபலங்கள் பங்கேற்பில் பெங்களூருவில் கோலாகலம்
ஆர்ட் ஆஃப் லிவிங்கின் 45வது ஆண்டு விழா வெறும் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், ஆன்மீகம், படைப்பாற்றல், மனநலம் மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு பெரும் கலாச்சார நிகழ்வாகவும் அமைந்தது. இந்த நிகழ்வில் பேசிய குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், “வாழ்க்கையே ஒரு நாடகம் போன்றது. உலகை இயக்கும் அந்த உயர்ந்த சக்தி எப்போதும் உங்களை கவனித்து கொண்டிருக்கிறது,” என்று கூறினார்.
மே 27, 2026: பெங்களூருவில் உள்ள ஆர்ட் ஆஃப் லிவிங் சர்வதேச மையத்தில், அந்த அமைப்பின் 45வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. மனிதநேய சேவை, தியானம், மனநலம் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வு ஆகியவற்றை உலகளவில் பரப்பியதற்காக குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு இந்த நிகழ்வில் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர், பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, திரைப்பட தயாரிப்பாளர் சஜித் நடியாத்வாலா, நடிகர்கள் விக்ராந்த் மேஸ்ஸி, சுனில் குரோவர், நடிகர் மற்றும் கவிஞர் வினீத் குமார் சிங், பிரபல புகைப்படக் கலைஞர் அவிநாஷ் கவாரிகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரை பிரபலங்கள்:
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ராந்த் மேஸ்ஸி, குருதேவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட “வைட்” திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமை என தெரிவித்தார். “இந்த ஆசிரமம் எனது வீடு போன்றது. என் குருவின் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதம்,” என்று அவர் கூறியபோது ரசிகர்கள் உற்சாகக் கைத்தட்டலால் வரவேற்றனர்.
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, சுதர்ஷன் கிரியாவின் தாக்கம் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைப்பட தயாரிப்பிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். “ஒவ்வொரு படத்தையும் தொடங்கும் முன், என் படக்குழுவினருக்கு சுதர்ஷன் கிரியா கற்றுக்கொடுக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
நடிகர் சுனில் குரோவர், குருதேவுடன் தியானத்தில் கலந்து கொண்ட அனுபவத்தை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொண்டார். அதேபோல், நடிகர் வினீத் குமார் சிங், “நான் இங்கே இன்னும் முன்பே வந்திருக்க வேண்டும்,” என உருக்கமாக தெரிவித்தார்.
ஆன்மீக தலைவர்களின் முக்கியமானவர் – ஆளுநர் ஆர்லேகர்:
கேரள ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் தனது உரையில், “உலகிற்கு இன்று வழிகாட்டும் ஆன்மீக தலைவர்களில் குருதேவ் முக்கியமானவர். மனிதகுல முன்னேற்றத்திற்காக வாழும் அரிய ஆன்மா அவர்,” என்று பாராட்டினார்.
இந்த விழாவின் முக்கிய அம்சமாக “இன்டூஷன் பெஸ்ட்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். கண்களை கட்டிக்கொண்டு வாசித்தல், நினைவாற்றல் விளையாட்டுகள், படங்களை நகலெடுத்தல் உள்ளிட்ட திறன்களை குழந்தைகள் வெளிப்படுத்தினர். குறிப்பாக, 50 குழந்தைகள் கண்கட்டி சைக்கிள் ஓட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.
இந்த நிகழ்வில் பேசிய குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், “வாழ்க்கையே ஒரு நாடகம் போன்றது. உலகை இயக்கும் அந்த உயர்ந்த சக்தி எப்போதும் உங்களை கவனித்து கொண்டிருக்கிறது,” என்று கூறினார்.
ஆர்ட் ஆஃப் லிவிங்கின் 45வது ஆண்டு விழா வெறும் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், ஆன்மீகம், படைப்பாற்றல், மனநலம் மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு பெரும் கலாச்சார நிகழ்வாகவும் அமைந்தது.