Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil New Year 2025: தடைகளை வெல்லும் விசுவாவசு ஆண்டு.. மிதுன ராசிக்கான பலன்கள்!

2025ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் செழிப்பையும் கொண்டுவரும் என ஜோதிடம் கூறுகிறது. குடும்பத்தில் அமைதி, பணவரவு அதிகரிப்பு, தொழில் வளர்ச்சி போன்ற நல்ல விஷயங்கள் நிகழும். அதேசமயத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை என கணிக்கப்பட்டுள்ளது.

Tamil New Year 2025: தடைகளை வெல்லும் விசுவாவசு ஆண்டு.. மிதுன ராசிக்கான பலன்கள்!
மிதுன ராசிக்கான பலன்கள்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 15 Apr 2025 11:56 AM

வாழ்க்கையில் எந்த விஷயமாக இருந்தாலும் அதனை ராஜ தந்திரத்துடன் எதிர்கொள்ளும் மிதுன ராசியினருக்கு (Gemini Zodiac) புதிய விசுவாவசு ஆண்டு எப்படி இருக்கிறது என பார்க்கலாம். இந்த தமிழ் புத்தாண்டானது (Tamil New year) உங்கள் ராசிக்கு வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை படிப்படியாக குறைக்கும் வகையில் அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதியானது நிலவும். தம்பதியினர் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி மகிழ்ச்சி காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். மே 18ஆம் தேதி முதல் ராசிக்கு 9 ஆம் வீட்டில் ராகு பகவான் அமர்வதால் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். நீண்ட நாளாக திட்டமிட்டு வந்த சுப காரியங்கள் கைகூடி வரும். கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளால் தடுமாறிய நீங்கள் இனிமேல் நிலையான எதிர்காலத்தை நோக்கி நடைபெறுவீர்கள்.

தந்தை வழி சொத்து பிரச்சினைகள் தீரும். மனைவியுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வீடு வாகனங்கள் வாங்குவதற்கான வங்கி கடனானது கிடைக்கும். பழைய நண்பர்கள் மீண்டும் தொடர்பில் இருப்பார்கள். முடிந்தவரை இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். குழந்தை பாக்கியம் உள்ளிட்ட மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும் அக்கம் பக்கத்தினருடன் இருந்த மனக்கசப்பு நீங்கி அன்பு அதிகரிக்கும்.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை

ஜென்ம குருகாலம் மே 14ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் இந்த காலகட்டத்தில் உடன் பிறந்தவர்களுடன் கருத்து மோதல் உண்டானாலும் அவை உடனடியாக தீரும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். முடிந்தவரை காய்கறி, பழ வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். மாதம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. திடீர் பயணங்கள் ஏற்படுவதால் அலைச்சல் அதிகமாக இருப்பதாக எண்ண வேண்டாம். முக்கிய பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும்.

ஆன்மீகப் பயணம் சென்று வருவதற்கான வாய்ப்பு அமையும். பெண்களுக்கு தங்கள் கணவர் வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். மனதில் நிலவி வந்த கவலைகள் யாவும் காணாமல் போகும். குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். திருமண வயதில் உள்ள பெண்கள் மனதுக்கு பிடித்தமானவரை திருமணம் செய்வதற்கான காலம் கனியும். பெற்றோர் அனைத்து சூழ்நிலைகளிலும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் வளர்ச்சி

வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி நன்மை பிறக்கும். தொழில் போட்டியால் முடங்கிக் கிடந்த மிதுன ராசியினர் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்குவீர்கள். கொடுக்கல் வாங்கலில் சாதகமான நிலை உண்டாகும். உத்தியோகத்தில் பணியிடங்களில் மேலதிகாரியுடன் நெருக்கமான உறவு உண்டாகும். உங்களுக்கு கொடுக்கப்படும் எவ்வளவு பெரிய பொறுப்புகள் என்றாலும் அதனை சுமையாக கருதாமல் கவலையின்றி செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். இதுவரை கிடைக்காமல் இருந்த வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும். இந்த தமிழ் புத்தாண்டு எவ்வளவு தடைகள் இருந்தாலும் அதனை கடந்து வாழ்க்கையில் வெற்றி நடை போட போடுவதற்கான காலமாக அமையும் என சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீ வராஹி அம்மனை வழிபட்டால் நன்மைகள் விளையும் என கணிக்கப்பட்டுள்ளது.

(இந்த ஜோதிட தகவல்கள் ஆன்மிக நம்பிக்கையின் கீழ் இணையத்தில் உலா வரும் தகவல்கள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 எந்த விதத்திலும் பொறுப்பில்லை)

தர்பூசணியுடன் சாப்பிடக்கூடாத 4 உணவுகள் - எச்சரிக்கும் நிபுணர்கள்!
தர்பூசணியுடன் சாப்பிடக்கூடாத 4 உணவுகள் - எச்சரிக்கும் நிபுணர்கள்!...
இதய நோய்களை சில விநாடிகளில் கண்டுபிடிக்கும் ஏஐ!
இதய நோய்களை சில விநாடிகளில் கண்டுபிடிக்கும் ஏஐ!...
வெயிலால் ஏற்படும் தோல் எரிச்சல்... டாக்டர் சொல்லும் அறிவுரை!
வெயிலால் ஏற்படும் தோல் எரிச்சல்... டாக்டர் சொல்லும் அறிவுரை!...
கோடையில் நீங்கள் சிக்கன் சாப்பிடுகிறீர்களா? பிரச்சனை உண்டாகும்!
கோடையில் நீங்கள் சிக்கன் சாப்பிடுகிறீர்களா? பிரச்சனை உண்டாகும்!...
குங்ஃபூவை பயன்படுத்தி திருடனை வீழ்த்திய இளைஞர் - வைரல் வீடியோ
குங்ஃபூவை பயன்படுத்தி திருடனை வீழ்த்திய இளைஞர் - வைரல் வீடியோ...
Amazon Great Summer Sale - டாப் 5 ஏசி பிராண்டுகள்!
Amazon Great Summer Sale - டாப் 5 ஏசி பிராண்டுகள்!...
காதலில் விழுந்த ஷிகர் தவான்! பெண் புகைப்படத்துடன் வெளியான அப்டேட்
காதலில் விழுந்த ஷிகர் தவான்! பெண் புகைப்படத்துடன் வெளியான அப்டேட்...
இளைஞருக்கு குளிரை சூடாகவும், சூடானவை குளிராகவும் உணரும் நோய்!
இளைஞருக்கு குளிரை சூடாகவும், சூடானவை குளிராகவும் உணரும் நோய்!...
பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? எளிதாக இப்படி செய்து பாருங்க!
பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? எளிதாக இப்படி செய்து பாருங்க!...
தியேட்டரில் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும்
தியேட்டரில் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும்...
யாருடன் கூட்டணி ? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?
யாருடன் கூட்டணி ? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?...