AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்நாட்டில் மார்ச் 21 அன்று ரமலான் கொண்டாட்டம் – தலைமை காஜி அறிவிப்பு

தமிழ்நாட்டில் மார்ச் 21, 2026 சனிக்கிழமை அன்று ரமலான் கொண்டாடப்படவுள்ளதாக தலைமை காஜி அறிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்த நிலையில் மார்ச் 19, 2026 அன்று பிறை தென்படாததால் நாளை மறுநாள் அதாவது மார்ச் 21, 2026 அன்று ரமலான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மார்ச் 21 அன்று ரமலான் கொண்டாட்டம் – தலைமை காஜி அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 19 Mar 2026 20:56 PM IST

சென்னை, மார்ச் 19: தமிழ்நாட்டில் மார்ச் 21, 2026 சனிக்கிழமை அன்று ரமலான் கொண்டாடப்படவுள்ளதாக தலைமை காஜி அறிவித்துள்ளார். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்து கடவுளை வழிபடுவது வழக்கம். நோன்பு திறக்கும் நாள் ரமலான் பண்டிகையாக கொண்டாடப்படும். இந்த நிலையில் மார்ச் 19, 2026 அன்று பிறை தென்படாததால் நாளை மறுநாள் அதாவது மார்ச் 21, 2026 அன்று ரமலான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் கொண்டாட்டம் அறிவிப்பு

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பில், மார்ச் 19, 2026 அன்று வியாழக்கிழமை மாலை ஷவ்வால் மாதத்திற்கான பிறை தமிழகத்தில் எந்த பகுதியிலும் தென்படவில்லை. எனவே ரமலான் மாதம் 30 நாட்கள் பூர்த்தியடைகிறது. இதனையடுத்து மார்ச் 21, 2026 அன்று சனிக்கிழமை அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்படுகிறது.

இதையும் படிக்க : காரடையான் நோன்பு.. பெண்களே விரதம் இருக்க முடியாவிட்டாலும்.. இதை தவறவிடாதீர்கள்!!

தலைமை காவலர் அறிவிப்பு

புனித ரமலான் பாதத்தில் நாம் மேற்கொண்ட நோன்பு மற்றும் நல் அமல் எல்லாம் வல்ல இறைவன் அங்கீகரிப்பான். இந்த இனிய நாளில் நம்மிடையே ஈகையும் சகோதரத்துவமும் தழைக்கட்டும். ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்து மகிழ்வுடன் இந்த பெருநாளை கொண்டாடுவோம். அனைவருக்கும் இதயம் கனிந்த ஈதுல் ஃபிதர் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் கடந்த மாதம் முதல் ரமலான் நோன்பு தொடங்கி விரதம் இருந்து வருகின்றனர். இஸ்லாமிய நாட்காட்டியின் படி ரமலானுக்கு அடுத்த மாதமான ஷவ்வால் பிறை தென்பட்டவுடன் தொடங்கும்.பிறை தென்பட்டவுடன் அதற்கு மறுநாள் முஸ்லீம்கள் ரம்ஜான் பண்டிகையாக கொண்டாடுவார்கள். அதன் படி மார்ச் 19, 2026 அன்று பிறை தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் பிறை தெரியாத காரணத்தால் மார்ச் 21, 2026 அன்று ரமலான் கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க : தடைகளை நீக்கி வெற்றி தரும் கணபதி ஹோமம்

புதுச்சேரியிலும் ரமலான் கொண்டாடப்படும் தேதி அறிவிப்பு

மேலும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரியிலும் ரமலான் பண்டிகை மார்ச் 21, 2026 அன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால் அங்கு மார்ச் 20, 2026 அன்று அறிவிக்கப்பட்ட விடுமுறை சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 9, 2026 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரமலானை முன்னிட்டு மார்ச் 21 மற்றும் 22, 2026 சனி ஞாயிறு 2 நாட்களும் வேட்புமனு தாக்கல் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us