சபரிமலை நவகிரக கோயில் பிரதிஷ்டை.. இன்று மாலை கோயில் நடை திறப்பு..
Sabarimala Temple: சபரிமலையில் இருக்கும் மாளிகைப்புறம் நவகிரக கோயில் புதிய இடத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பிரதிஷ்டை நாளை மறுநாள் (ஜூலை 13, 2025) நடக்க இருக்கிறது. இதற்காக ஜூலை 11, 2025 தேதியான இன்று கோயில் நடை திறக்கப்பட உள்ளது.

சபரிமலை நடை திறப்பு, ஜூலை 11, 2025: சபரிமலை மாளிகைப்புறம் கோயிலில் இடது புறம் உள்ள நவகிரக மண்டபத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கோயிலுக்கான பிரதிஷ்டை வருகின்ற 2025 ஜூலை 13 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக சபரிமலையின் நடை இன்று அதாவது ஜூலை 11 2025 தேதியான இன்று திறக்கப்பட உள்ளது. உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று சபரிமலையாகும். இந்த சபரிமலை கோயில் நடை தினசரி திறக்கப்படாது. மாதம் ஒருமுறை மட்டுமே இந்த நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலையில் விஷு கனி, மகர விளக்கு, மண்டல பூஜை, மகர ஜோதி, கார்த்திகை மாதம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.
நவகிரக கோயில் பிரதிஷ்டை:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வேண்டுதல் முன்வைத்து சாமி தரிசனம் செய்வார்கள். இதற்காக பிரத்யேகமாக சிறப்பு ஏற்பாடுகள் சிறப்பு பேருந்துகள் சிறப்பு ரயில்கள் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்படும். அந்த வகையில் சபரிமலை மாளிகை புறம் கோயிலில் இருக்கக்கூடிய நவக்கிரகத்தை வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது. அதற்கான பிரதிஷ்டை வருகின்ற ஜூலை 13 2025 அன்று நடைபெற இருக்கிறது. இதற்காக இன்று மாலை அதாவது ஜூலை 11 2025 தேதியான இன்று மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
Also Read: கேரளா பத்மநாப சுவாமி கோயிலில் தரிசன நேரம் மாற்றம்
நாளை மறுநாள் காலை 11 மணிக்கு பிரதிஷ்டை நடத்தப்படும்:
தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். பின்னர் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜூலை 12 2025 தேதி ஆன நாளை பிரதிஷ்டைக்கு முன்னோடியான பூஜைகள் மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் ஜூலை 13 2025 தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று கணபதி ஹோமம், உஷ பூஜை, மரப்பாணி ஆகிய சடங்குகளுக்கு பின்னர் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் நவகிரக கோயில் பிரதிஷ்டை நடைபெறுகிறது.
Also Read: கிரகங்களின் தாக்கத்தால் அவதியா? – இப்படி விளக்கேற்றினால் தீர்வு கிட்டும்!
ஆடி மாத பூஜைக்காக நடை திறப்பு:
அன்று இரவு சபரிமலையில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. 2025 ஜூலை 11 முதல் ஜூலை 13ஆம் தேதி ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதனை தொடர்ந்து ஜூலை 16, 2025 அன்று மாலை ஆடி பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது