கார்த்திகை மாதம்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள்! ஜோதிடர் ஷெல்வி கணிப்பு

Karthigai month: துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்தில் குடியேறும் சூரியன், தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தின் பிறப்புக்கு வழிவகுக்கிறது. நாளை (நவ.17) பிறக்கும் இந்த கார்த்திகை மாதம் ஆனது, மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசியினருக்கும் தனித்துவமான பலன்களை அளிக்கிறது.

கார்த்திகை மாதம்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள்! ஜோதிடர் ஷெல்வி கணிப்பு

யதார்த்த ஜோதிடர் ஷெல்வி

Updated On: 

16 Nov 2025 16:41 PM

 IST

கார்த்திகை மாதம் சில ராசிகளுக்கு சவாலான மாதமாக இருக்கும் என யதார்த்த ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார். இது பொதுவான ஜோதிட பார்வையாக இருந்தாலும் துல்லிய பலன், பிறந்த நட்சத்திரம் மற்றும் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து மாறுபடும் என்றும் அவர் கூறியுள்ளார். அதன்படி, கார்த்திகை மாதம் ரிஷபம், சிம்மம், துலாம், மகரம், மீனம் ஆகிய 5 ராசிகளுக்கு ஏன் சவாலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்ஏன் இந்த ராசிகளுக்கு கார்த்திகை மாதம் சவாலாகும்? என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளார். அதாவது, கார்த்திகை மாதத்தில் சூரியன், சந்திரன், சனி ஆகிய கிரகங்களின் நிலை மாற்றம். விருச்சிகம் மற்றும் தனுசு நிலைகளின் கிரக அமைப்பு. சில ராசிகளுக்கு “அஷ்டம சனி”, “அர்த்தாஷ்டம சனி” அல்லது “விருச்சிக சூரியன்” தாக்கம் ஏற்படும். இந்த கிரக அமைப்புகள் சிலருக்கு மன அழுத்தம், தாமதம், பணப் பிரச்சினை போன்றவற்றை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

ரிஷப ராசி:

சவால்கள்: பணநிலை மந்தமாகும், தேவையற்ற செலவுகள், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலருக்கு பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். பேஸ்புக் போன்றவற்றை முக்கிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது. 22.11.2025 மாலை 4.47 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். இதனால் சிலருக்குக் காரியத்தடைகள், கால தாமதங்கள் ஏற்படலாம்.

செய்ய வேண்டியது: வெள்ளிக்கிழமை லட்சுமி பூஜை, சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தல் நலம். மாலை நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்றுதல் நன்மையைக் கொண்டு வரும்.

Also Read : சிவன் பார்வை உண்டு.. கார்த்திகை மாதத்தின் அகல் விளக்கு தானம் தெரியுமா?

சிம்ம ராசி:

சவால்கள்: உடல் மூலம் சோர்வு, மன அழுத்தம், வேலை பார்க்கும் இடத்தில் போட்டி, அழுத்தம் போன்றவை ஏற்படும். ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். சிலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களின் பிடியில் கவுரத்திற்காக வழியச் சென்று அகப்படுவார்கள்.

செய்ய வேண்டியது: கார்த்திகை தீபத்தில் பங்கேற்பது, சுப்ரமணியருக்கு சிவப்பு மலர் சமர்ப்பித்து வழிபடாம். ஓம் நமச்சிவாய மந்திரத்தை 108 முறை கூறலாம்.

துலாம் ராசி:

சவால்கள்: உறவினருடன் சிறுசிறு பிரச்சினைகள்,வருமானம் மந்தமாகும், உடல் நலத்தில் கவனம் தேவை. பங்குச் சந்தையில் அதிக முதலீடு வைத்து இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு உண்டாகும். கண்டகச் சனியினால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகும்

செய்ய வேண்டியது: சனி பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுதல் வேண்டும்.

மகரம் ராசி:

சவால்கள்: வேலை தொடர்பான தாமதம்,கவலை, மனச்சஞ்சலம், பயண சிரமம் போன்றவை ஏற்படும். காதல் போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது. கடந்து வந்த காலங்களில் நடந்த எதிர்மறையான சம்பவங்களை மறந்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொள்வது நல்லது.

செய்ய வேண்டியது: கார்த்திகை சோம வார விரதம், சிவபெருமானுக்கு விபூதி அர்ச்சனை செய்யலாம்.

Also Read : ராஜ யோகம் 2025: துலாத்தில் சுக்கிரன் சூரியன் சேர்க்கை.. 5 ராசிக்கு அதிர்ஷ்ட பலன்கள்!

மீனம் ராசி:

சவால்கள்: முடிவு எடுக்க முடியாமை, எதிர்பாராத செலவுகள், சமூகத்தில் தேவையற்ற பேச்சுகளை எதிர்கொள்ள நேரிடும். விரயச் செலவும் உண்டாகும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாது போன்ற மன வருத்தம், சங்கடங்கள் நீடிக்கும். 17.11.2025 அன்று மதியம் 3.35 முதல் 20.11.2025 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைப்பவர் நீங்களாக இருந்தால் ஊதியம் பெறுபவர் வேறொருவராக இருப்பார்கள்.

செய்ய வேண்டியது: திருப்பாவை/திருவெம்பாவை படித்தல் அவசியம். சுப்ரமணியருக்கு நவதானியங்கள் நிவேதனம் செய்ய வேண்டும். வீட்டில் காலை, மாலை தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

பொதுப் பரிகாரங்கள்:

ஓம் நமசிவாய மந்திரம் சொல்லி பிரார்த்தனை செய்தல், மாலை நேரம் தீபம் ஏற்றுதல். சிவபெருமான், முருகன் கோவில் தரிசனம் செய்தல். கார்த்திகை தீபத்தில் பங்கேற்பது. சைவ உணவு, சாந்தமான வாழ்க்கை முறையை பின்பற்றுதல். அமாவாசை/பௌர்ணமியில் நெய் தீபம் ஏற்றி கார்த்திகை மாதப்பலன்களை பெறலாம்.