Vastu Tips: வீட்டின் வாஸ்து பிரச்னையை போக்கும் கற்பூரம்.. என்ன செய்யலாம்?
கற்பூரம் பூஜை வழிபாட்டில் ஒரு முக்கிய அங்கமாகும். இது வாஸ்து சாஸ்திரத்திலும் சிறப்பிடம் பெறுகிறது. வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை நடுநிலையாக்கி, நேர்மறை ஆற்றலைக் கொண்டுவர கற்பூரம் உதவுகிறது. நிதி சிக்கல்கள், குடும்பப் பிரச்சனைகள், மன அமைதியின்மை போன்றவற்றை சரி செய்வதாக நம்பப்படுகிறது.

ஒவ்வொரு மதத்திலும் இறை வழிபாடு என்பது மிக முக்கியமானது. அந்த வழிபாட்டில் இடம்பெறும் பூஜை பொருட்களுக்கும் தனி சக்தி உண்டு. அந்த வகையில் இந்து மதத்தில் செய்யும் பூஜை வழிபாட்டி கற்பூரம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடவுள் வழிபாடானது கற்பூர ஆரத்தி செய்வதன் மூலம் நிறைவு பெறுகிறது. அத்தகைய கற்பூரம் வாஸ்து சாஸ்திரத்திலும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, கற்பூரம் வீட்டில் உள்ள முக்கியமான வாஸ்து குறைபாடுகளை சரிசெய்யக்கூடிய ஒரு சிறந்த கருவியாகும். கற்பூரம் எதிர்மறை சக்தியை நடுநிலையாக்குகிறது என்று நம்பப்படுகிறது. இது வீட்டிற்கு நேர்மறையை கொண்டு வருகிறது. அந்த வகையில் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரக்கூடிய சில விஷயங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
சில நேரங்களில் நாம் கையில் எடுக்கும் வேலை மீண்டும் மீண்டும் தோல்வியடையும். இதனால் மிகப்பெரிய அளவில் மனச்சோர்வு அடைவோம். அதேசமயம் வீட்டில் அமைதியின்மை சூழல் ஏற்பட்டால் கவலை அதிகரிக்கும். அதற்குக் காரணம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியாக இருக்கலாம். அப்படியான சூழல் உள்ளவர்கள் காலையிலும் மாலையிலும் கற்பூரம் ஏற்றுவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இது நம் சுற்றுப்புறத்தை சுத்திகரிக்கிறது. நேர்மறை ஆற்றலின் ஓட்டத்தை அதிகரிக்கிறது.
Also Read: ஒர்க் ஃப்ரம் ஹோம் பிரச்னைகளை தீர்க்கும் வாஸ்து டிப்ஸ்!
வீட்டில் ஒருவரின் நிதி நிலைமை சரியில்லை என்றால், பூஜை அறையில் கற்பூரத்தில் ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை எரிக்கவும். இதைச் செய்வது நிதித் தடைகள் நீங்கி நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என நம்பப்படுகிறது. வீட்டிலுள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்குவதற்கும் கற்பூரம் பயனுள்ளதாக கருதப்படுகிறது. வீட்டின் வெவ்வேறு மூலைகளில் சிறிய கற்பூர துண்டுகளை வைக்கவும். அவை உருகும்போது, அவற்றை மாற்றவும். இந்த தீர்வு படிப்படியாக வீட்டிலிருந்து எதிர்மறையை நீக்குகிறது. இது சுற்றுச்சூழலில் அமைதியைக் கொண்டுவருகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, பிரதான நுழைவாயிலிலும், பூஜை அறையிலும் கற்பூரத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் மங்களகரமானது. இது வீட்டில் நேர்மறை ஆற்றலைப் பராமரிக்கிறது. நிதி நிலைமையை பலப்படுத்துகிறது.கணவன் மனைவி இடையே சண்டை தொடர்ந்தால், பதற்றம் அல்லது மோதலைத் தடுக்க படுக்கையறையில் ஒரு கற்பூரத் துண்டை வைத்திருப்பது நன்மை பயக்கும். தூங்கும் போது தலையணைக்கு அடியில் கற்பூரத்தை வைத்திருப்பது மனதை அமைதிப்படுத்தி, நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது என்பது ஐதீகமாக உள்ளது.
Also Read: வீட்டில் இந்த திசையில் புத்தர் சிலை இருந்தால் செல்வம் கொட்டும்!
ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து, தண்ணீருடன் கற்பூரத்தைச் சேர்ப்பது வீட்டின் வளிமண்டலத்தில் நேர்மறை ஆற்றலைப் பரப்ப உதவும். கற்பூரம், ரோஸ் வாட்டர் மற்றும் தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கலந்து, குலுக்கி, இந்தக் கலவையை வீட்டில் தெளித்தால் காற்று புத்துணர்ச்சி பெறும். மனம் அமைதியாக இருக்கும் என கூறப்படுகிறது.
(ஆன்மிக மற்றும் வாஸ்து சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)