குளித்த பிறகு செய்யக்கூடாதவை.. சனியால் பெரும் இழப்பு உண்டாகும்!
Vastu Tips in Tamil: குளியலறையின் சுத்தம் உடல் ஆரோக்கியம் மற்றும் ஜோதிட ரீதியான நன்மைகளை அளிக்கிறது. வாஸ்து சாஸ்திரப்படி, குளித்த பிறகு வாளியில் தண்ணீர் சேமிப்பது, ஈரமான துணிகளை விட்டுச் செல்வது, குளிக்கும் முன் திருத்தம் செய்த முடியை அங்கேயே விட்டு செல்வது போன்றவை தவறானவையாக பார்க்கப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை மட்டுமல்லாமல் ஜோதிட ரீதியாகவும் எப்போதும் சுத்தமானவராக இருக்க வேண்டும். நாம் இருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் நாம் தினமும் குளித்து இறை வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி, குளியலறையில் குளிப்பதற்கு சில விதிகள் உள்ளன. உதாரணமாக குளித்த பிறகு வாளி காலியாக இல்லாமல் தண்ணீரை சேமிப்பது, ஈரமான துணிகளை குளியலறையில் விட்டுச் செல்வது போன்ற பல விஷயங்களை சொல்லலாம். அப்படியாக குளியலறை தொடர்பான வாஸ்து சாஸ்திர விதிகளையும், அவை வாழ்க்கையில் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்பது பற்றியும் நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
குளிப்பது என்பது உடலை சுத்தப்படுத்தும் ஒரு செயல்முறை மட்டுமல்ல, சோர்வை நீக்கி மன புத்துணர்ச்சியைப் பெற இது ஒரு எளிய வழியாகும். இருப்பினும், பெரும்பாலும் மக்கள் குளித்த பிறகு சில சிறிய தவறுகளைச் செய்கிறார்கள். இந்த தவறுகள் அவர்களின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, வீட்டின் ஆற்றலையும் பாதிக்கின்றன என்பதை அறிய வேண்டும்.
Also Read: தூங்கும்போது இப்படி செய்யாதீங்க.. பண பிரச்னை வரலாம்!




குளியலறை வாஸ்து விதிகள்
குளித்த பிறகு, சிலர் குளியலறையில் உள்ள வாளியில் தண்ணீரை குளித்த நீரை சிறிது மீதம் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இருப்பினும், இதுபோன்ற நேரத்தில் தண்ணீரை சேமித்து வைப்பது அசுபமானது. இந்த செயல் ராகு மற்றும் கேதுவின் கோபத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. இதனால், வீட்டில் வறுமை நிலவும் என்று நம்பப்படுகிறது. எனவே குளித்து முடித்த பிறகு எப்போதும் வாளியை சுத்தம் செய்து. அழுக்கு நீரை ஊற்றி மீண்டும் புதிய தண்ணீரில் நிரப்ப வேண்டும். ஒருபோதும் காலி வாளியை வைத்திருக்க வேண்டாம்.
குளிப்பதற்கு முன் சிறிய அளவிலான முறையில் முடி திருத்தம் செய்வார்கள். அந்த முடியை அங்கேயே விட்டுச் செல்வது தவறான காரியமாகும். இது வீட்டில் எதிர்மறை சக்தியையும் ஈர்க்கிறது. இதைச் செய்வது சனி மற்றும் செவ்வாய் கிரகத்தின் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு முறை குளிக்கும்போதும் குளியலறையை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பலர் குளித்த உடனேயே ஈரமான துணிகளை குளியலறையில் விட்டுவிடுகிறார்கள். இந்தப் பழக்கம் ஆரோக்கியத்திற்கும் வாஸ்துவிற்கும் தீங்கு விளைவிக்கும். ஈரமான துணிகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சையை வளர்க்கின்றன. எனவே, ஈரமான துணிகளை வெயிலிலோ அல்லது காற்றிலோ உலர்த்துவது நல்லது.
Also Read: வாழ்க்கையில் இந்த 5 பொருட்களை யாரிடமும் கடன் வாங்காதீர்கள்!
வாஸ்து சாஸ்திரத்தின்படி, குளித்த உடனேயே குங்குமம் வைப்பது, பவுடர் போடுவது போன்ற செயல்கள் பொருத்தமானதல்ல என்று கருதப்படுகிறது. குளித்த பிறகு, உடலும் மனமும் அமைதியடைய நேரம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவசரமாக அதனை மேற்கொள்வது வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
சிலருக்கு குளிக்கும் போது செருப்பு அணிந்து கொள்ளும் பழக்கம் உள்ளது. இது வாஸ்து சாஸ்திரத்தில் தடைசெய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்தப் பழக்கம் உடல் ரீதியாக ஆபத்தானது மட்டுமல்லாமல் நேர்மறை ஆற்றலையும் தடுக்கிறது. குளித்த பிறகு குளியலறை கதவை மூடி வைத்திருப்பது உள்ளே ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும். இது பூஞ்சை உருவாவதற்கு வழிவகுக்கிறது. இந்த ஈரப்பதம் சுவர்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் தோல் மற்றும் சுவாச நோய்களையும் ஏற்படுத்துகிறது.
(வாஸ்து சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)