கந்த சஷ்டியின் கடைசி நாளில் மட்டும் விரதம் இருக்கலாமா? விரதம் இருப்பதால் என்ன பலன்?
Kandha Sashti : கந்த சஷ்டியின் கடைசி நாளான அக்டோபர் 27, 2025 அன்று பக்தர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அன்றைய தினம் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அன்றைய தினம் மட்டும் விரதம் இருப்பதால் என்ன பலன் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்துக்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் கந்த சஷ்டி (Kanda Sashti) விழா அக்டோபர் 27, 2025 நாளையுடன் முடிவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வளர்பிறை முதல் நாள் தொடங்கி, தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெறும் இந்த விழா பக்தர்கள் விரதம் இருந்து வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். முருகனின் ஆறு முகத்தை குறிக்கும் வகையில் 6 நாட்கள் இந்த நிகழ்வு கொண்டாடப்படவிருக்கிறது. மேலும் திருச்செந்தூர் (Tiruchendur) முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெறவிருக்கிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள விருக்கின்றனர். இந்த கந்த சஷ்டி நாட்களில் மக்கள் விரதம் இருந்து முருகனின் வேண்டிக்கொண்டால், வேண்டியது அனைத்தும் நடக்கும் என்பது நம்பிக்கை.
கந்த சஷ்டியின் கடைசி நாளில் விரதம் இருக்கலாமா?
கந்த சஷ்டி விழா ஒவ்வொரு ஆண்டும் ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆறு நாட்களும் பக்தர்கள் விரதம் இருந்து வேண்டிக்கொண்டால் தங்கள் வேண்டியது அனைத்தும் நடக்கும் என்பது நம்பிக்கை. சிலர் வேலை போன்ற சூழ்நிலை காரணமாக விரதம் இருக்க முடிவதில்லை. அவர்கள் கந்த சஷ்டியின் கடைசி நாளான அக்டோபர் 27, 2025 அன்று மட்டும் இருந்தாலும் முழு பலன் கிடைக்கும் என ஆன்மிக பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதற்கு சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கின்றனர். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க : Kandha Shashti: கந்த சஷ்டி விரதம் இருக்கப் போறீங்களா? – இதை மறக்காதீங்க!




கடைசி நாளில் எப்படி விரதம் இருப்பதால் என்ன பலன்?
குழந்தை வரம் வேண்டுபவர்கள் இன்றைய நாளில் விரதம் இருந்தால் அடுத்த கந்த சஷ்டிக்குள் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதற்காக கணவன் மனைவி இருவரும் சேர்ந்து விரதம் இருக்க வேண்டும். மேலும், தீவிர நோய் பாதிப்பு இருந்தாலும் , வேலை கிடைக்க வேண்டும் என நினைத்தாலும், வீடு கட்ட வேண்டும் என நினைத்தாலும், திருமணமாக வேண்டும் என நினைத்தாலும் அன்று ஒரு நாள் தீவிரமாக விரதம் இருக்க வேண்டும். அடுத்த சஷ்டிக்குள் உங்கள் வேண்டுதல் பலிக்கும் என்பது நம்பிக்கை.
- கந்த சஷ்டியின் கடைசி நாளில் விரதம் இருக்க, முதல் நாளே வீட்டை சுத்தப்படுத்த வேண்டும்.
- விரதம் இருப்பவர்கள் கடைசி நாளில், அதிகாலையில் எழுந்து வாசலில் கோலம் போட வேண்டும்,
- அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முருகனை நினைத்து துதிக்க வேண்டும்.
இதையும் படிக்க : Tiruchendur: தொடங்கியது கந்த சஷ்டி.. திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
- முதல் நாளே பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
- தீராத பிரச்னை இருப்பவர்கள் அன்றைய நாளில் கந்த சஷ்டி கவசம் படித்தால் பிரச்னைகள் தீரும்.
- 6 மணி வரை விரதம் இருந்து உங்கள் பிரச்னைகளை சொல்லி, அதனை தீர்த்து வைக்குமாறு வேண்டிக்கொள்ள வேண்டும்.