Kandha shasti: 2025ம் ஆண்டின் மகா கந்த சஷ்டி எப்போது? – அதன் வரலாறு தெரியுமா?
கந்த சஷ்டி என்பது முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்த வீர சம்பவத்தை நினைவுகூரும் ஆறு நாள் திருவிழாவாகும். ஐப்பசி மாதத்தில் வரும் இந்த மகா சஷ்டி விரதம் முருக பக்தர்கள் கடைபிடிக்கும் முக்கிய வழிபாடாகும். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறும்.

தமிழ் கடவுள் என கொண்டாடப்படுபவர் முருகப் பெருமான். அவருக்கு உள்ளூர் முதல் உலகம் வரை ஏராளமான கோயில்கள் உள்ளது. அதனை தவிர தமிழ்நாட்டில் முருகனுக்கு அறுபடை வீடுகள் அமைந்துள்ளது. இத்தகைய முருகனைக் காண தினந்தோறும் பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கிருத்திகை, சஷ்டி, கார்த்திகை விரதம் என மாதந்தோறும் அவனுக்குரிய உகந்த நாட்களும் வருகிறது. இத்தகைய முருகனுக்குரிய முக்கிய விசேஷ தினங்களில் ஒன்றாக கந்த சஷ்டி பார்க்கப்படுகிறது. மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் சஷ்டி வந்தாலும், ஐப்பசி மாதம் வரும் வளர்பிறை சஷ்டி மகா சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.
கந்த சஷ்டி வரலாறு
முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வு நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும் இந்த போரானது சுமார் ஆறு நாட்கள் நடைபெற்றது அதனை நினைவு கூறும் வகையில் தான் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை பிரதமை திதி தொடங்கி சஷ்டி வரையிலான ஆறு நாட்கள் கந்த சஷ்டியாக கடைபிடிக்கப்படுகிறது.
Also Read: அடேங்கப்பா.. இந்த முருகன் கோயிலுக்கு இப்படி ஒரு பவரா?
சஷ்டி என்றால் ஆறு என்பது அர்த்தமாகும். இந்த ஆறு நாட்களும் இந்து மதத்தில் சைவ சமயத்தினர் விரத நாட்களாக கருதி முருகப்பெருமானை வழிபடுகின்றனர். முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் போரில் சூர பத்மன் முதலில் மரமாகவும், இரண்டாவது சேவல் மற்றும் மயில் ஆகவும், தொடர்ந்து சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியவையாகவும் அவதாரம் எடுத்து வந்தான்.
அவனை தனது வேலினால் சூரசம்ஹாரம் செய்த சம்பவமே கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. முருகனுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் இருந்தாலும் இரண்டாம் படை வீடான கடற்கரைச் சார்ந்த திருச்செந்தூரில் தான் இந்த கந்த சஷ்டி விழா மிக விவரிசையாக கொண்டாடப்படும்.
இந்த ஆறு நாட்களும் ஆன்மீக அன்பர்கள் அதிகாலையில் எழுந்து புனித நீராடி விரதம் இருந்து விளக்கேற்றி பூஜை வழிபாடு செய்வார்கள். மேலும் பகல் பொழுதில் உணவருந்தாமல் இரவில் பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு ஏழாம் நாள் விரதத்தினை முடிப்பார்கள்.
Also Read: 7 மாதம் மட்டுமே திறந்திருக்கும் முருகன் கோயில்.. எங்கு தெரியுமா?
2025 ஆம் ஆண்டு கந்த சஷ்டி எப்போது?
2025 ஆம் ஆண்டு கந்த சஷ்டியானது அக்டோபர் 22ம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது. தொடர்ந்து 6ம் நாளான அக்டோபர் 27ம் தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த 6 நாட்களும் பால தேவராய சுவாமிகள் முருகப்பெருமானை வழிபட்டு அவனின் பெருமைகளை உணர்த்தும் வண்ணம் பாடல் ஒன்றை இயற்றினார். அதுவே அனைவராலும் கந்த சஷ்டி கவசம் என அழைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)