Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vaikasi Visakam: முருகப்பெருமானின் 6 முகத்துக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

முருகப்பெருமான், ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். அவரது ஆறு முகங்களும் தனித்தனி குணங்களைப் பிரதிபலிக்கின்றன. மழலைத்தனம், ஞானம், அருள், வீரம், வெற்றி, அன்பு ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கிறது. இந்த ஆறு முகங்களின் பின்னணியில் உள்ள ஆன்மீக அர்த்தங்கள் பற்றி நாம் இந்த செய்தியில் காணலாம்.

Vaikasi Visakam: முருகப்பெருமானின் 6 முகத்துக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
முருகப்பெருமான்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 02 Jun 2025 11:48 AM

முருகப்பெருமான் இந்து மதத்தில் பலகோடி மக்களால் வணங்கப்படும் தெய்வமாவார். உள்ளூர் முதல் உலகம் வரையிலான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அவர் தமிழ் கடவுள் என போற்றப்படுகிறார். இப்படியான முருகனுக்கு எண்ணற்ற பெயர்கள் உள்ளது. அதில் ஒன்று தான் ஆறுமுகன். முருகனுக்கு ஆறு முகங்கள் இருப்பதால் அந்த பெயர் வந்தது என சொல்லி விடலாம். ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் பொருளின் அர்த்தம் அரிந்தால் நமக்கே சிலிர்ப்பு ஏற்படும். முருகப்பெருமான் வைகாசி விசாக தினத்தில் அவதரித்தான் என புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பான நாள் 2025 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இப்படியான நிலையில் முருகனின் ஆறு முகங்களுக்கு என்ன அர்த்தம் என்பது பற்றி காணலாம்.

முருகன் பிறந்த கதை 

முருகப்பெருமான் சூரபத்மனை திருச்செந்தூரில் வதம் செய்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலாகும். அப்படிப்பட்ட சூர பத்மன் என்னும் அரக்கன் தேவர்களை கடுமையாக துன்புறுத்தி வந்தான். இதனால் செய்வதறியாது திகைத்து அவர்கள் நேரடியாக சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற ஈசன் சூரபத்மனை அளிக்க தன்னுடைய நெற்றி கண்ணில் இருந்து தீப்பொறியை உருவாக்கினார். அது ஆறு பாகங்களாக பிரிந்து கங்கை நதியில் பயணித்து தென்னிந்தியாவில் உள்ள சரவணப் பொய்கையை அடைந்தது. இதனையடுத்து இந்த ஆறு தீப்பொறிகளும் குழந்தைகளாக மாறிய நிலையில் அவற்றை வளர்க்கும் பொறுப்பானது கார்த்திகை பெண்களிடம் பார்வதி தேவி மூலம் வழங்கப்பட்டது. கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்ட முருகப்பெருமான் கார்த்திகேயன் என்ற பெயரோடு திகழ்வதற்கு காரணமானார்.

அதே சமயம் ஆறு குழந்தைகளும் ஒரே உருவமாக மாற்றப்பட்ட பின் முருகன் கந்தன் என பெயர் பெற்றான். ஆன்மீக சான்றோரை கேட்டால் உலகை படைத்தாளும் ஈசனுக்கு ஐந்து முகம் என்றால், அவனது மகனான சுப்பிரமணியனுக்கு ஆறுமுகம் என சொல்வார்கள். அது ஏன் மற்ற தெய்வங்களுக்கு இல்லாத வகையில் முருகனுக்கு மட்டும் ஆறுமுகங்கள் உள்ளது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இந்த ஆறும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களை உணர்த்தக்கூடியவையாக திகழ்கிறது.

ஆறு முகங்களின் அர்த்தம்

எளிதாக சொல்ல வேண்டுமென்றால்

முதல் முகம்: மழலை முகம் – ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்
இரண்டாவது முகம்: ஞான முகம் ஈஸ்ருடன் ஞானமொழி பேசும் முகம்.
மூன்றாவது முகம்: அருள்முகம் கூறும் அடியார் வினை தீர்க்கும் முகம்
நான்காவது முகம்: வீரமுகம் குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம்
ஐந்தாவது முகம்: வெற்றி முகம் மாறுபடு சூரரை வதைத்த முகம்.
ஆறாவது முகம்: அன்பு முகம் வள்ளியை மனம் புணர வந்த முகம்

அதே சமயம் இன்னும் சில காரணங்களும் சொல்லப்படுகிறது

அதாவது முதல் முகம் உண்மையாக இயங்க வேண்டும், உள்ளத்தில் உள்ளதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும். வாமதேவ முகமான இரண்டாவது  காக்கும் கடவுளான விஷ்ணுவை குறிப்பதாகும். மூன்றாவது முகம் அகோரமுகம் சூரபத்மனை வதம் செய்ய வந்த முகமாகும்.  நான்காவது முகம் தத் புருஷ முகம்,இது கோபம் தணிந்து சாந்தமாக இருப்பதை குறிக்கும். ஐந்தாம் முகம் ஈசானிய முகம் தந்தை சிவனைப் போலவே இருப்பது, ஆறாவது முகம் அதோ முகம் தேடி வந்து அனுக்கிரகம் செய்யும் முகம் என சொல்லப்படுகிறது.

(ஆன்மிக நம்பிக்கையின் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)