வைகாசி பிரம்மோற்சம்.. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது!
Kanchipuram Varadaraja Perumal chariot: வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் திருத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்தது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், 3- ஆம் நாள் கருட சேவை உற்சவம், 7- ஆம் நாள் தேரோட்டம், 9- ஆம் நாள் தீர்த்தவாரி உற்சவம் ஆகியவை வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில், சிறப்பு மிக்க வைகாசி பிரம்மோற்சவத்தில் முக்கிய திருவிழாவான தேரோட்டம் இன்று புதன்கிழமை காலை ( ஜூன் 3) தொடங்கி நடைபெற்றது. மேள வாத்தியங்கள் முழங்க கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். அந்த தேரில், வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேரோட்டத்தையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் அதிகாலை 3 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து வான வேடிக்கைகள் முழங்க ராஜ நடை உடன் தேவாதி தேவன் ராஜன் கோலத்தில் எழுந்து வந்தார்.
100 டன் எடை உடைய தேரில் அருள்பாளித்த பெருமாள்
தொடர்ந்து, 100 டன் எடை, 63 அடி உயரம், 30 அடி அகலம், 5 நிலைகளைக் கொண்ட தேரில் எழுந்தருளின் காஞ்சிபுரம் நகரில் நான்கு ராஜ வீதிகளில் வரதராஜ பெருமாள் வலம் வந்தார். இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். நாளாபுரமும் பக்தர்கள் கூட்டம் அலைமோத காத்திருந்தனர். இந்த பக்தர்கள் கடலில் வரதராஜ பெருமாள் திருத்தேர் ஆடி அசைந்தாடி வந்தது. இந்த கோவிலில் பெருமாள் நின்றார் கோலத்தில் அருள்பாளித்து வருகிறார். இந்த கோவிலின் வரலாறுபடி, பெருமாள் தனது மனைவி சரஸ்வதியை விட்டுவிட்டு மற்றவர்கள் ஆன சாவித்திரி, காயத்ரி ஆகியோரை வைத்து அந்த யாகத்தை மேற்கொண்டார்.
மேலும் படிக்க: வீட்டில் துளசி செடியை எந்த திசையில் வைப்பது சிறந்தது? வாஸ்து சொல்லும் உண்மை என்ன?
யாகத்தை அழிப்பதற்காக வேகவதி ஆறாக மாறிய சரஸ்வதி
இதன் காரணமாக கோபமுற்ற சரஸ்வதி யாகத்தை அளிப்பதற்காக வேகவதி என்ற ஆறாக உருவெடுத்தார். இதை அடுத்து பிரம்மதேவன், மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். அப்போது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வலியில் பெருமாள் சயனித்து கிடந்தார். இதனால், பெருமாளை தாண்டி ஆற்று நீர் செல்ல முடியவில்லை. இவ்வாறு பிரம்மன் வேண்டியதும் வரம் தந்ததால் வரதராஜர் என்று பெயர் பெற்றார் அந்த பெருமாள்.
16 கைகளுடன் சங்கு சக்கரத்துடன் தோன்றிய சுதர்சன ஆழ்வார்
பெருமாள் துணையால் யாகத்தை நிறைவு செய்த பிரம்மனுக்கு யாக குண்டத்தில் இருந்து புண்ணிய கோடி விமானத்துடன் பெருமாள் தோன்றி அருள் பாலித்தார். பிறகு பிரம்மதேவன், அத்தி மரத்தில் ஒரு சிலை வடித்து அதனை இங்கே பிரதிஷ்டை செய்தார். பிரம்மனின் யாகத்தில் 16 கைகளுடன் சங்கு சக்கரம் தாங்கியவாறு சுதர்சன ஆழ்வார் தோன்றினார். இவரே இந்த கோவிலில் பிரம்ம மூர்த்தியாகவும் இருந்து வருகிறார். இது இந்த கோயிலின் வரலாறாகும்.
மேலும் படிக்க: தேரில் வரும் ஜனக மாரி… தேடி வரும் குடும்ப அமைதி: சோழவந்தான் ரதோற்சவ வைபவம்!



