AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவில்களில் சிறப்பு பூஜையின் போது ஏன் மங்கள இசை இசைக்கப்படுகிறது…?

Divine Music: தமிழர்களின் தொன்மை வாய்ந்த சங்க இலக்கியங்கள் மற்றும் பரிபாடல் போன்ற நூல்கள் அக்கால மக்களின் வாழ்வில் இசைக்கருவிகளும் பண்களும் பெற்றிருந்த முதன்மையைப் பறைசாற்றுகின்றன. தேவாரத்தின் தூய்மையான பண்ணிசையும், திருவாசகம் மற்றும் திருப்பாவையின் எளிய நாட்டுப்புற வடிவங்களும் இன்றும் ஆலயங்களில் அதிகாலை வேளையில் ஒலித்து பக்தர்களின் மனங்களை இறைவழியில் நெறிப்படுத்துகின்றன.

கோவில்களில் சிறப்பு பூஜையின் போது ஏன் மங்கள இசை இசைக்கப்படுகிறது…?
தெய்வீக இசைImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 20 May 2026 12:45 PM IST

ஆன்மிகம் என்பது வெறுமனே சடங்குகள் சார்ந்தது மட்டுமல்ல; அது மனித வாழ்வியலோடும், மன அமைதியோடும் நெருங்கிய தொடர்புடையது என்பதை பக்தி இசையின் மூலம் உணர முடிகிறது. உலக அளவில் மனிதர்கள் தங்களின் மகிழ்ச்சி, சோகம், உழைப்பு மற்றும் களைப்பு என அனைத்துத் தருணங்களிலும் இசைக்கே முதலிடம் தருகின்றனர். கர்நாடகம், தமிழிசை, இந்துஸ்தானி, மேற்கத்திய இசை எனப் பல வடிவங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் ஆன்மாவை நெகிழச் செய்யும் ஒரே புள்ளியில்தான் இணைகின்றன. இசை என்ற சொல்லுக்கு ‘ஏற்றுக்கொள்ளுதல்’ அல்லது ‘இசைதல்’ என்று பொருள் உண்டு. நாம் ஒரு பாடலைக் கேட்கும்போது அறியாமலேயே தலையசைப்பது இதன் காரணமாகத்தான். நமது ஆராதனைகளுக்கு இறைவன் செவிசாய்க்க வேண்டும் என்பதற்காகவே, முற்காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் பண்ணிசையோடு தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி இறைவனை வசம் செய்தனர்.

மனித வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மூன்று சங்குகள்

ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான ஒட்டுமொத்த வாழ்க்கைச் சக்கரமும் மூன்று முக்கிய இசை ஒலிகளுக்குள் அடங்கிவிடுகிறது என்பதை சித்தர்கள் தங்களின் பாடல்களில் தெளிவுபடுத்தியுள்ளனர். குழந்தை பிறக்கும் தருணத்தில் மங்கல ஒலியாக சங்கு இசைக்கப்படுகிறது. பின்னர், அந்த இசை வடிவமான சங்கின் மூலமாகவே குழந்தைக்குப் பாலூட்டும் மரபு தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, மனித வாழ்வின் அடுத்த முக்கிய கட்டமான திருமணப் பேற்றின்போது மங்கல நாண் பூட்டப்படும் வேளையில் இரண்டாவது முறையாக சங்கு ஒலிக்கப்படுகிறது. இறுதியாக, மனித வாழ்வின் இறுதிப் பயணத்தின் போதும் சங்கு ஊதப்படுகிறது. இவ்வாறு மனிதனின் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய மூன்று நிலைகளும் நாத தத்துவத்தோடு பின்னிப் பிணைந்துள்ளன.

சங்க கால இலக்கியங்களில் இசை நயங்கள்

தமிழர்களின் தொன்மை வாய்ந்த சங்க இலக்கியங்கள், அக்கால மக்களின் வாழ்வியலில் இசை எந்த அளவிற்கு முதன்மை பெற்றிருந்தது என்பதைப் பறைசாற்றுகின்றன. தொல்காப்பியர் காலம் தொட்டே இசை பற்றிய அரிய குறிப்புகள் தமிழ் நூல்களில் காணப்படுகின்றன. அக்காலத்தில் இசை பாடுவதையே தொழிலாகக் கொண்ட பாணர்கள், யாழ்ப்பாணர்கள் எனப் பல்வேறு பிரிவினர் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக, ‘பரிபாடல்’ போன்ற சங்க நூல்களில் வையை நதியின் வெள்ளப் பெருக்கின் போது எழும் இயற்கைச் சத்தமும், அங்கு நீராடும் மக்களின் இசை முழக்கமும் இணைந்து காதுகளுக்குப் பெருவிருந்தாக அமைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

தேவாரக் காலமும் தமிழின் இசைப் பொற்காலமும்

சைவ சமயம் வளர்ந்த வரலாற்றில் தேவாரக் காலம் என்பது தமிழர்களின் இசைப் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இன்றும் சைவத் திருமுறைகள் ஓதுவா மூர்த்திகளால் பண் முறைப்படி ஆலயங்களில் பாடப்பட்டு வருகின்றன. “இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” போன்ற வரிகள் பக்தி இசையின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன. தேவாரக் காலத்தில் வீணையும் யாழும் தனித்தனி முதன்மை இசைக் கருவிகளாகப் போற்றப்பட்டன. தூய்மையான வீணை இசை குறித்தும், பாலையாழ் மற்றும் செவ்வழிப் பண் போன்ற யாழ் ராகங்கள் குறித்தும் தேவாரப் பாடல்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவாரப் பாடல்கள் அனைத்தும் 23 வகையான குறிப்பிட்ட பண்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட மரபுவழிப் பாடல்களாகும்.

 

Follow Us