AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Astrology: மிதுனத்தில் புதன் பகவான்.. கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள்!

ஜூன் 6, 2025 அன்று புதன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது. இதனால் சிம்மம், ரிஷபம், விருச்சிகம், கும்பம் ராசிகளுக்கு நிதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். சிம்ம ராசிக்காரர்கள் வேலை, உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Astrology: மிதுனத்தில் புதன் பகவான்.. கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள்!
ஜோதிடப்பலன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 03 Jun 2025 14:13 PM IST

ஜோதிட சாஸ்திரம் என்பது ஒவ்வொருவரின் பிறப்பு தொடங்கி இறப்பு அனைத்து காலக்கட்டங்களிலும் நிகழக்கூடியதை கணிப்பதாக கருதப்படுகிறது. 12 ராசிகள், அது சார்ந்த 27 நட்சத்திரங்கள் யாவும் ஜோதிடத்தில் உள்ள ஒன்பது கிரகங்களின் செயல்பாடுகள் மூலம் குறிப்பிடதகுந்த பலன்களை பெறுகிறது. அது ராசிக்கு சாதகமாகவும், பாதகமாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட கிரகங்களில் ஒன்றான புதன் 2025, ஜூன் 6ம் தேதி தனது ராசியை மாற்றுகிறது. அப்படியான புதன் பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மாறுவதால், சில ராசிக்காரர்கள் நிதி உள்ள பல சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.

பொதுவாக கிரகங்கள் ராசி மாறுவது வழக்கமான நிகழ்வாகும். அந்த வகையில் புதன் கிரகம் ஒரு ராசியில் 23 நாட்கள் நீடிக்கும். ஆனால் இந்த காலக்கட்டம் மேஷம் தொடங்கி மீனம் வரையிலான ராசிகளில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கும்.

  1. சிம்மம்: இந்த காலக்கட்டத்தில் சிம்ம ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள் என சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் முதலாளி, தொழிலாளியாக எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அதற்கான முழு பலனும் கிடைக்காது. வேலையில் உள்ள அதிகாரிகள் நீங்கள் சரியாக இருந்தாலும் ஏதாவது ஒரு விஷயத்தில் கோபப்படலாம். தொழில் சூழ்நிலையும் இந்த காலக்கட்டத்தில் சாதகமாக இருக்காது. உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
  2. ரிஷபம்: புதன் கிரகத்தின் சஞ்சாரத்தால், ரிஷப ராசிக்காரர்கள் நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் எந்த வேலை செய்தாலும் இறக்கத்தையே சந்திக்க வாய்ப்புள்ளது. அதனால்  இந்த ராசிக்காரர்கள் ஜூன் மாதம் முழுவதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பண விஷயத்தில் கொடுக்கல், வாங்கலில் மிகவும் கவனமாகவும், சரியாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாமல் நீங்கள் நிதி சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
  3. விருச்சிகம்: இந்த ராசிக்காரர்கள் ஜூன் மாதம் முழுவதும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் புதனின் சஞ்சாரம் இந்த நேரத்தில் ராசிக்காரர்களின் புத்திசாலித்தனத்தை தவறான விஷயங்களை நோக்கி திரும்பக்கூடும். இதன் காரணமாக நீங்கள் சட்ட சிக்கல்களில் சிக்கக்கூடும். மேலும் நிதி சிக்கல்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் அதிகரித்து பிரச்சினைகளில் சிக்கும் வாய்ப்பும் உள்ளது.
  4. கும்பம்: புதன் கிரகத்தின் சஞ்சாரத்தால், கும்ப ராசிக்காரர்கள் பல்வேறு நிதி சிக்கல்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் தகராறுகள் நடக்கும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அதைத் திருப்பிச் செலுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். மேலும் மேலும் கடன்கள் அதிகரிக்கும். எல்லாவற்றிலும் பிரச்சினைகள் உண்டாகும் என்பதால் சிறிது காலம் எதையும் செய்ய வேண்டாம், தள்ளி வைப்பது நல்லது.

(ஜோதிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் அடிப்படையில் இந்த தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமாக எந்த விளக்கமும் இல்லை. டிவி9 தமிழ் எதற்கும் பொறுப்பேற்காது)

Follow Us