AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Life Motivation: வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா? – இந்த 5 விஷயம் பற்றி பேசாதீங்க!

வாழ்க்கையில் வெற்றியையும் மன அமைதியையும் பெற, நிதி இழப்பு, குடும்பச் சண்டைகள், விரும்பத்தகாத சம்பவங்கள், மோசடி, அவமானங்கள் போன்ற ஐந்து விஷயங்களை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என சாஸ்திரம் கூறுகிறது. இவற்றை பகிர்வதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் உண்டாகலாம் என சொல்லப்படுகிறது.

Life Motivation: வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா? – இந்த 5 விஷயம் பற்றி பேசாதீங்க!
வாழ்க்கையில் வெற்றிக்கான வழிகள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 20 Jun 2025 12:37 PM IST

ஒவ்வொருவரின் வாழ்க்கை என்பது எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது. வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம், அதிர்ஷ்டம், ஏமாற்றம் என மாறி மாறி வந்து நம்மை சோதனைக்குள்ளாக்கும். இருந்தாலும் மனம் தளராமல் முயற்சி ஒன்றை வைத்துக்கொண்டு முயன்றால் செல்வம் தொடங்கி அத்தனை வளங்களையும் பெற்று வாழ்வாங்கும் வாழ்வோம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் வாழ்க்கையில் வெற்றியையும் அமைதியையும் அடைய ஐந்து விஷயங்களை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. வெற்றி நாம் அனைவரும் அடைய விரும்பும் விஷயமாகும். அதேபோல் மன அமைதி நாம் வேண்டும்போது கிடைக்க வேண்டும். ஆனால் இவை இரண்டையும் கிடைக்காமல் செய்ய பல எதிர்மறையான காரணிகள் சமூகத்தில் உள்ளது. அப்படியாக நாம் பகிர்ந்துக் கொள்ளக் கூடாத விஷயங்கள் பற்றி காணலாம்.

அந்த 5 விஷயங்கள் என்ன தெரியுமா?

  1. நிதி இழப்பு அல்லது நிதி சிக்கல்: வாழ்க்கையின் அனைவரின் தேவையாக பணம் உள்ளது. அதேசமயம் நிதி சிக்கல் மற்றும் நிதி இழப்பு என்பது ஒவ்வொருவரும் சந்திக்கூடிய வாழ்க்கை சவால்களில் ஒன்றாகும். ஆனால் நம்மை சுற்றியிருப்பவர்களிடம் நிதி இழப்புகள் அல்லது நிதிப் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இது ஒரு நபரை எளிதில் பாதிக்கக்கூடியதாக விஷயமாக மாறிவிடும். மோசடி, ஏமாற்றுதல், கடன் பிரச்னைக்கு தள்ளுதல் போன்றவற்றிற்கு நம்மை இட்டுச் செல்லும்.  நிதிப் பிரச்சினைகளை நெருங்கிய நபர்களிடம் மட்டுமே பகிர்ந்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் சேமிப்பை அதிகரித்தால் கடன் வாங்குவது குறையும் என்பதை உணர வேண்டும்.
  2. குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு: உறவுகள் இருந்தால் அதில் விரிசல், கருத்து வேறுபாடு என்பவை இருக்கத்தான் செய்யும். ஆனால் குடும்ப உறுப்பினர்களுடனான கருத்து வேறுபாடுகள் அல்லது சண்டைகளைப் பற்றி வெளியாட்களிடம் பேசுவது நல்லது கிடையாது. இது பிரச்னையை பெரிதாக்கும். சம்பந்தப்பட்ட நபரை மன வருத்தத்திற்குள்ளாக்கும். எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட ஆட்களிடம் பேசி தீர்ப்பது சிறந்தது என சொல்லப்பட்டுள்ளது.
  3. விரும்பத்தகாத சம்பவம்:  வீடாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட வாழ்கையாக இருந்தாலும் சரி  நடந்த தவறான செயல்களையோ அல்லது விரும்பத்தகாத சம்பவங்களையோ யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. இது வீட்டில் அமைதியை வளர்க்கும். இதுபோன்ற விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது தேவையற்ற விவாதங்களுக்கும் அவநம்பிக்கைக்கும் வழிவகுக்கும்.
  4. மோசடி அல்லது ஏமாற்றுதல்: சமீபகாலமாக மற்றவர்களால் ஏற்படும் மோசடி அல்லது ஏமாற்றுதல் பிரச்னை என்பது அதிகரித்து வருகிறது. இது குறித்து மற்றவர்களிடத்தில் பகிர்வது நமது சுயமரியாதையைக் குறைக்கும். அதேசமயம் பொருத்தமான சட்ட நடவடிக்கை மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது சிறந்தது.
  5. அவமானம் – வலி: வாழ்க்கையில் நிச்சயம் முன்னேற செல்லும் பாதையில் நாம் அவமானங்களையும் வலிகளையும் சந்திப்போம். இவை எல்லாம் அனுபவ பாடமாக இருக்க வேண்டும். மாறாக அனுதாபம் கிடைக்கும் என நினைத்து பகிர்ந்து கொள்வது ஒரு நபரின் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த வலிகளிலிருந்து முன்னேறி வலிமையாக மாற முயற்சிப்பது நல்லது.

(சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் அடிப்படையில் இக்கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)

Follow Us