AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாளை பிரதோஷம்.. ஈசனின் அருளைப்பெற இதை மட்டும் செய்ய மறக்காதீர்கள்!

Pradosham: நாம் ஈசனுக்கு எதைக் கொடுக்கிறோம் என்பதை விட, எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம். சோமநாதனைப் போல முழுமையான சரணாகதியுடன் இந்த மார்ச் 30 பிரதோஷத்தன்று ஈசனை வழிபட்டால், உங்கள் வாழ்வின் கவலைகள் மறைந்து ஒளிமயமாக மாறும் என்பது நம்பிக்கை.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 29 Mar 2026 14:21 PM IST
மனித வாழ்வில் ஏற்படும் போராட்டங்கள் மற்றும் தடைகளை நீக்கி, நல்வழி காட்டக்கூடிய அற்புதமான நாள் பிரதோஷம். அந்தவகையில், 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி வரக்கூடிய பிரதோஷம் மிகவும் சக்தி வாய்ந்தது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் கிடைக்கக்கூடிய மாற்றங்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்.

1 / 5
பிரதோஷத்தின் தத்துவம்: 'பிரம்' என்றால் பாவம், 'தோஷம்' என்றால் நீங்குவது என்று பொருள். நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவ வினைகளை வேரோடு அறுக்கக்கூடிய காலமே பிரதோஷ காலம் ஆகும். புராண காலத்தில் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை ஈசன் உண்ட நேரமே பிரதோஷ வேளை என்று போற்றப்படுகிறது. மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையிலான இந்த நேரத்தில் சிவபெருமான் நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஆனந்த தாண்டவம் ஆடுவதாக ஐதீகம்.

2 / 5
மார்ச் 30 பிரதோஷ தினத்தில் சிவபெருமான் அருளால் நீண்ட நாட்களாக உங்களைத் தொடர்ந்து வரும் தீராத கர்ம வினைகள் மற்றும் பாவங்கள் நீங்கி, மன நிம்மதி கிடைக்கும். சோமநாதன் என்ற ஏழை பக்தரின் கதையை உதாரணமாகக் கொண்டு, உண்மையான பக்தியுடன் வழிபடுபவர்களின் வறுமை நீங்கி, செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது.

3 / 5
உங்களை ஏளனம் செய்தவர்கள் அல்லது உங்களுக்குத் தீங்கு நினைப்பவர்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் சூழல் உருவாகும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போகும் சுப காரியங்கள் மற்றும் திருமணத் தடைகள் நீங்கி, நல்ல செய்திகள் வந்து சேரும். குழப்பமான மனநிலையில் இருப்பவர்களுக்கு ஈசனின் அருளால் தெளிவான சிந்தனையும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் பிறக்கும்.

4 / 5
வழிபாட்டு முறை: பிரதோஷ வேளையில் (மாலை 4:30 - 6:00) சிவாலயத்திற்குச் சென்று நந்தி எம்பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது சிறப்பு. நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவபெருமானைத் தரிசிப்பது கோடி புண்ணியத்தைத் தரும். "ஓம் நமச்சிவாய" என்ற மந்திரத்தை மனதார உச்சரிப்பது கர்ம வினைகளை எரிக்கும் வலிமை கொண்டது.

5 / 5
Follow Us