இரவில் 7 மணிக்கு முன் சாப்பிடுவதால் நடக்கும் மேஜிக் – ஆச்சரிய தகவல்
: Health Insight: இன்றைய இளைஞர்கள் பலரும் நண்பர்களுடன் இணைந்து வித விதமான உணவுகளை இரவில் தான் ருசி பார்க்கிறார்கள். அப்படி செய்வது நீண்ட காலத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த கட்டுரையில் 7 மணிக்கு முன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
 
                                நாம் இரவு உணவு சாப்பிடும் நேரம் நமது ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தாமதமாக சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள், அஜீரணம், வாயு மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். ஆனால் நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பு உங்கள் உணவை முடித்தால், செரிமானம் மேம்படும் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் இரவு உணவை சீக்கிரமாக முடிப்பதன் மூலம், அடுத்த நாள் நீங்கள் சுறுசுறுப்பாக உணருவது மட்டுமல்லாமல், உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம். இரவு உணவு நேரம் நமது ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரவில் தாமதமாக சாப்பிடுவது, குறிப்பாக படுக்கைக்குச் செல்வதற்கு முன், செரிமான பிரச்சனைகள், வாயு, அஜீரணம் மற்றும் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். தூக்கத்தின் போது உடல் ஓய்வெடுக்கும். அந்த நேரம் உணவை ஜீரணிக்க சிரமப்பட வேண்டும். இதன் காரணமாக, நீங்கள் சரியாக தூங்க முடியாது.
மாலை 7 மணிக்கு முன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மகைள்
- உங்கள் இரவு உணவை சீக்கிரமாக முடிப்பதன் மூலம், உணவை முழுமையாக ஜீரணிக்க போதுமான நேரம் கிடைக்கும். இதன் காரணமாக, மறுநாள் காலையில் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள்.
- இரவு செல்ல செல்ல, நம் உடலில் இன்சுலின் தாக்கம் குறைகிறது. அதனால்தான் இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது.
இதையும் படிக்க : Laundry Drying Mistakes: துணிகளை காய போடும்போது இந்த தவறுகள் வேண்டாம்.. இது உங்கள் துணிகளை நாசமாக்கும்..!
- நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அல்லது அது உருவாகும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
- இரவில், நம் உடல் உணவை ஜீரணிக்காமல் உடலில் உள்ள செல்களை சரிசெய்வதில் மும்முரமாக உள்ளது. இந்த முக்கியமான செயல்முறை சரியாக நடக்க.. உணவை சீக்கிரமாக முடிப்பது நல்லது. இதனால் நம் உடலில் வளர்சிதை மாற்றம் சரியாக நடக்கும்.
இதையும் படிக்க : முதுகு வலியா? தவறான உட்காரும் நிலைகள் என்ன? தவிர்ப்பது எப்படி?




எல்லோரும் இரவு 7 மணிக்கு சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பே உணவை முடிப்பது மிகவும் முக்கியம். இந்த சிறிய மாற்றம் உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும், உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் பெரிதும் உதவும். நம் வாழ்க்கையில் செய்யும் சிறிய மாற்றம் கூட பெரிய அளவில் கைகொடுக்கும். இரவில் நல்ல தூக்கம் கிடைப்பதோடு, செரிமான பிரச்னைகளும் ஏற்படாமல் தடுக்க முடியும்.
 
                         
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                    