Skincare Tips: சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வை தரும் தக்காளி.. இவை எப்படி நன்மை பயக்கும்?

Tomato Benefits For Skin: தக்காளியில் லைகோபீன், வைட்டமின்கள் ஏ, சி, கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் இளமையையும், பளபளப்பையும் பாதுகாக்க உதவுகின்றன. தக்காளியை பச்சையாக சாப்பிடுவது அல்லது ஜூஸாக அருந்துவது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற ஊதா கதிர்களின் தீங்கிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றன.

Skincare Tips: சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வை தரும் தக்காளி.. இவை எப்படி நன்மை பயக்கும்?

தக்காளி நன்மைகள்

Published: 

16 Jul 2025 17:54 PM

தக்காளி (Tomato) இல்லாமல் ஒரு சமையல் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. தக்காளி இல்லாமல் குழம்பு, சட்னி என எதுவும் செய்ய முடியாது. அந்த அளவிற்கு தக்காளி காய்கறிகளை சமையலறையில் முக்கிய உணவு பொருளாக உள்ளது. இவை சமையலுக்கு மட்டுமின்றி மாறாக, இது உங்கள் முகத்தின் பளபளப்பு (Skincare Tips) மற்றும் ஆரோக்கியம் (Health) இரண்டிற்கும் ஒரு அருமருந்து என்றே சொல்லலாம். அதன்படி, தக்காளியை சரியான முறையில் உட்கொண்டால், இது உங்கள் சருமத்திலும் சிறந்த பங்களிப்பை காட்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தக்காளியில் லைகோபீன், வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இவை, நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவி செய்யும். பொதுவாக, இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் நமது சருமத்தை முன்கூட்டியே வயதாக்கி சுருக்கங்களை ஏற்படுத்தும். ஆனால், தக்காளி அவற்றின் விளைவைக் குறைத்து சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

ALSO READ: வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

தக்காளியை சரியாக எப்படி உட்கொள்வது..?

தக்காளியை சாலட் அல்லது ஜூஸாக சாப்பிட்டால், உடலுக்கு அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். தக்காளியை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதால் உடலில் வைட்டமின்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் நிரப்பப்படுகின்றன. இதன் காரணமாக சருமம் பளபளப்பாகத் தொடங்கும். மேலும்,  தக்காளியில் அதிக சத்தான கூறுகள் இருப்பதால், அதனுடன் அதன் தோலையும் சாப்பிடலாம்.

இது சருமத்திற்கு ஏன் நன்மை பயக்கும்?

தக்காளி சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இது மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்கிறது. இது தவிர, இதில் உள்ள லைகோபீன், புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. உங்கள் சருமத்தில் தோல் எரிச்சல் அல்லது வெயிலில் ஏற்பட்ட கருமை அடையாளங்கள் இருந்தால், தக்காளி அவற்றை சரி செய்யும்.

மிகவும் பயனுள்ள தக்காளி சாறு:

தக்காளி ஜூஸ் குடிப்பது சருமத்தை மட்டுமல்ல, முடி மற்றும் நகங்களையும் பலப்படுத்துகிறது. அதில் உள்ள கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் காரணமாக சருமம் பளபளப்பாகத் தொடங்குகிறது. மேலும், கண் பார்வையையும் கூர்மையாக்குகிறது.

ALSO READ: மாறிவரும் பருவநிலை.. உடலை நோயில் இருந்து பாதுகாக்கும் இஞ்சி, கேரட் ஜூஸ்!

சர்க்கரை மற்றும் இதயத்திற்கும் நன்மை பயக்கும்:

தக்காளியில் காணப்படும் ஆல்பா லிபோயிக் அமிலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில், தக்காளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற கூறுகள் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதிலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும்.