Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Side Effects of Beetroot: உடம்பில் இந்த பிரச்சனைகள் இருக்கா..? நீங்கள் ஏன் பீட்ரூட் சாப்பிடக்கூடாது தெரியுமா?

Beetroot Health Concerns: பீட்ரூட் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. ஆனால், குறைந்த இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகக் கற்கள், அலர்ஜி அல்லது அதிக இரும்புச்சத்து உள்ளவர்கள் பீட்ரூட்டைத் தவிர்க்க வேண்டும். இதில் இயற்கை சர்க்கரை அதிகம். எனவே, மருத்துவ ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது. பீட்ரூட் எல்லோருக்கும் ஏற்றதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Side Effects of Beetroot: உடம்பில் இந்த பிரச்சனைகள் இருக்கா..? நீங்கள் ஏன் பீட்ரூட் சாப்பிடக்கூடாது தெரியுமா?
பீட்ரூட்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Jul 2025 16:11 PM

ஆரோக்கியம் (Healthy) என்று பார்க்கும்போது பீட்ரூட் (Beetroot) மிக முக்கிய உணவு பொருளாக பார்க்கப்படுகிறது. உடலில் இரத்தம் இல்லாதவர்களுக்கு பீட்ரூட் இரத்தத்தை ஊற செய்யும். இதனால், இரத்த அழுத்தம் (Blood Pressure) கட்டுப்படுவது மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுகளையும் திறம்பட வெளியேற்றுகிறது. பீட்ரூட்டின் அடர் சிவப்பு நிறம் மற்றும் இதிலுள்ள ஊட்டச்சத்து நிறைந்த பண்புகள் உடலுக்கு நல்ல பலன்களை தரும். இவ்வளவு நல்ல பண்புகளை கொண்டிருக்கும் பீட்ரூட் சாப்பிடுவது அனைவருக்கும் நல்லதா என்றால் கிடையாது. சிலருக்கு இது ஆரோக்கியத்தில் பிரச்சனையை தரும். மருத்துவர்களின் கருத்துப்படி, உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட்டை தவிர்ப்பது நல்லது. அதன்படி, எந்த பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிடக்கூடாது என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

குறைந்த இரத்த அழுத்தம்:

பீட்ரூட்டில் அதிகளவிலான நைட்ரேட்டுகள் உள்ளன. இவை பொதுவாக உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாறி இரத்த நாளங்களை விரிவுபடுத்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றன. ஒருவருக்கு ஏற்கனவே குறைந்த இரத்த அழுத்தம் அதாவது ஹைபோடென்ஷன் பிரச்சனை இருந்தால் பீட்ரூட்டை உட்கொள்வது தலைச்சுற்றல், பலவீனம் மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ALSO READ: இந்த காய்கறி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் – சமீபத்திய ஆய்வில் தகவல்

சர்க்கரை நோய்:

பீட்ரூட்டில் இயற்கையான சர்க்கரை உள்ளது. இதில் உள்ள கிளைசெமிக் குறியீடு நடுத்தரத்தை விட அதிகமாக இருக்கும். இதை அதிகமாக உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். சர்க்கரை நோயாளிகள் இதை சீரான அளவில் உட்கொள்ள வேண்டும். அதிகளவில் எடுத்து கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனை பேரில் சீராக எடுத்துக்கொள்ளலாம்.

சிறுநீரக கல்:

பீட்ரூட்டில் ஆக்சலேட் அதிகமாக உள்ளது. இது சிறுநீரகத்தில் ஆக்சலேட் வகை சிறுநீரக கற்களை ஏற்படுத்தும். ஒருவருக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை இருந்தால் அல்லது ஏற்கனவே இருந்திருந்தால் பீட்ரூட் முற்றிலுமாக நிறுத்த வேண்டும் .​

அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்கலாம்:

பீட்ரூட் சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமை, தோல் அலர்ஜி, வாயு அல்லது வயிற்று பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தும். அதே நேரத்தில், பிரச்சனை இருப்பவர்கள் முடிந்த அளவு பீட்ரூட் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

ALSO READ: தினமும் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இரும்புச்சத்து:

பீட்ரூட்டில் நல்ல அளவு இரும்புச்சத்து உள்ளது. அதேநேரத்தில், உடலில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளவர்கள் அதாவது ஹீமோக்ரோமாடோசிஸ் பிரச்சனை கொண்டவர்கள் பீட்ரூட்டை உட்கொள்வது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

பீட்ரூட் ஆரோக்கியமான உணவு பொருள் என்றாலும், ஒவ்வொரு நபரின் ஆரோக்கியமும் உடல் தேவைகளும் வேறுபட்டவையாக இருக்கும். மேலே உள்ள ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் , மருத்துவரை அணுகாமல் பீட்ரூட்டை உட்கொள்ள வேண்டாம் . ஆரோக்கியமான உணவு என்பது அனைவருக்கும் பாதுகாப்பானது என்று அர்த்தமல்ல .

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)