Food Recipe: வீட்டிலேயே சுவையான கேக் செய்ய ஆசையா..? எளிதான வெண்ணிலா கப் கேக் செய்முறை இதோ!

Vanilla Cupcakes Recipe: வீட்டிலேயே சுவையான வெண்ணிலா கப் கேக்குகளை எளிதாகவும் விரைவாகவும் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் குறைவு, செய்முறை மிகவும் எளிது. முட்டை இல்லாமலும் இந்த கேக்கை செய்யலாம். மைக்ரோவேவ் அல்லது பாரம்பரிய முறையில் தயாரிக்கலாம். கிரீம் மற்றும் தூவல்களால் அலங்கரித்து, சுவையான கப் கேக்குகளை அனுபவிக்கலாம்.

Food Recipe: வீட்டிலேயே சுவையான கேக் செய்ய ஆசையா..? எளிதான வெண்ணிலா கப் கேக் செய்முறை இதோ!

கப் கேக் செய்முறை

Published: 

12 Jul 2025 18:26 PM

ஒவ்வொரு நாளும் வித்தியாசமான உணவுகளை செய்து சாப்பிட விரும்புவோம். அது ஸ்வீட்ஸ் (Sweets), காரம் (Spicy) மற்றும் கேக் என எதுவானாலும் சரி. ஏதாவது ஒரு விருந்து என்றால் கேக் என்பது தேவையான ஒன்றி. அப்படிதான் விருந்துகளில் கேக் இல்லாமல் முழுமையடையாது. கேக்கை ஆர்டர் செய்வதற்கு பதிலாக, உங்கள் சொந்த கைகளால் சிறப்பான கப்கேக்கை செய்யலாம். கப்கேக்குகளை (Cup Cake) வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். இதற்கு அதிக பொருட்கள் தேவையில்லை. கப் கேக்குகள் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதனை தயாரிக்கும் எளிய முறை பற்றியும் இங்கே தெரிந்து கொள்வோம்.

வெண்ணிலா கப்கேக்

தேவையான பொருட்கள்:

  • அனைத்து உபயோக மாவு (All-Purpose Flour) – ஒரு கப்
  • தூள் சர்க்கரை – அரை கப்
  • பால் – 1/2 கப்
  • வெண்ணெய் – கால் கப்
  • பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
  • வெண்ணிலா எசன்ஸ் – 1/2 தேக்கரண்டி
  • முட்டை – 1

முட்டை இல்லாமல் கேக் செய்ய விரும்பினால், முட்டைக்குப் பதிலாக ¼ கப் தயிரைப் பயன்படுத்தலாம்.

ALSO READ: பானிபூரி பிரியரா நீங்கள்..? வீட்டிலேயே சுத்தமா இப்படி செய்யலாம்!

கேக் அலங்காரத்திற்கான பொருட்கள்

  • கிரீம் – 1/2 கப்
  • தூள் சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
  • ட்ரை ப்ரூட்ஸ் – தூவலுக்கு ஏற்ற வகையில்

கப்கேக் செய்முறை

  1. முதலில் கேக் செய்ய, ஒரு பாத்திரத்தில் மாவு மற்றும் பேக்கிங் பவுடரை நன்கு சலித்து எடுக்கவும்.
  2. மற்றொரு கிண்ணத்தில், வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரையை லேசாகவும் நன்றாக கலக்கி லேசானதாக மாற்றவும்.
  3.  அடுத்ததாக முட்டை அல்லது தயிரை ஊற்றி அதனுடன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. இப்போது கப் கேக் செய்ய மேலே செய்து தயாராக வைத்துள்ள அனைத்தையும் மாவுடன்  சேர்த்து மென்மையான கலக்க தொடங்கவும். குறிப்பு மாவு கலக்கும்போது மிகவும் கெட்டியாகவோ அல்லது மெல்லியதாகவோ இல்லாமல் நடுதர அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
  5. தயாரிக்கப்பட்ட மாவை கப்கேக் அச்சில் பாதிக்கும் மேல் நிரப்பவும். இப்போது மைக்ரோவேவில் சுமார் 15-20 நிமிடங்கள் வைக்கவும்.
  6. கேக் உள்ளே இருந்து எடுத்ததும் சரியாக வெந்ததா இல்லையா என்பதை சரிபார்க்க ஒரு டூத்பிக் செருகி சோதனை செய்து கொள்ளவும்.
    கேக் தயாரிக்கப்பட்டதும், அதை முழுவதுமாக ஆற விடவும். அதன் பிறகு, அதன் மேல் கேக் க்ரீமை தடவி, வண்ணத் தூவல்கள் அல்லது நறுக்கிய பழங்களால் அலங்கரிக்கவும்.

ALSO READ: கூல் கிளைமேட்டில் ஹாட்டாக சாப்பிட ஆசையா..? சுவையான மைசூர் போண்டா ரெசிபி இதோ!

குறிப்பு – உங்களிடம் மைக்ரோவேவ் இல்லையென்றால், கப்கேக்குகளை குக்கர் அல்லது பாத்திரத்தில் சுடலாம். வெண்ணிலாவுக்கு பதிலாக ரோஸ் எசென்ஸ், சாக்லேட் எசன்ஸ் சேர்ப்பதன் மூலமும் வேறுமாதிரியான சுவையை கொண்டுவரலாம்.