Kitchen Burns: சூடான எண்ணெய், நீராவியால் தீக்காயமா..? உடனடியாக என்ன செய்யலாம்..? என்ன செய்யக்கூடாது?
Treat Kitchen Burns Fast: சமையலறையில் ஏற்படும் தீக்காயங்களுக்கு உடனடி முதலுதவி மிகவும் முக்கியம். தீக்காயம் பட்ட இடத்தை குளிர்ந்த நீரில் நனைக்கவும், ஐஸ் பயன்படுத்த வேண்டாம். பல் பேஸ்ட், வெண்ணெய் போன்றவற்றை தவிர்க்கவும். கற்றாழை ஜெல், வாழைப்பழக் கூழ் போன்ற வீட்டு வைத்தியங்கள் பயன்படுத்தலாம்.

பல நேரங்களில் சமையலறையில் (Kitchen) அவசரமாக வேலை செய்யும் போது, நம் வீட்டு பெண்கள் தங்களது கை, நெஞ்சு, முகம் போன்ற பகுதிகளில் சூடான எண்ணெய், நீராவி, நெருப்பு அல்லது வேறு எந்த பாத்திரத்தால் சுட்டு கொள்வது போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி உருவாகும் தீக்காயம் (Minor Burns) அதிக எரிச்சல் உணர்வை தரும். இதனை தாங்குவது என்பது மிகவும் கடினம். இதுபோன்ற சூழ்நிலையில், தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்வது என்று பலரும் அறிவதில்லை. மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் என்ன தடவுவது என்பதை புரிந்து கொள்வது இல்லை. பல நேரங்களில் சிறிய எண்ணெய் தெறிப்புகள் தானாகவே குணமாகும். ஆனால் சில நேரங்களில் இவை பெரிய பெரிய கொப்புளங்களாக உருவெடுத்து அதீத எரிச்சலை தரும்.
இதுபோன்ற சூழ்நிலையில், உடனடியாக சில முதலுதவியை வீட்டிலேயே மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு அதிக கொப்புளங்கள் ஏற்பட்டாலோ அல்லது தோலின் உள் அடுக்கு எரிந்திருந்தாலோ, உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
ALSO READ: இயர்பட்ஸ் பயன்படுத்துவதால் காது கேளாமை பிரச்னைகள் ஏற்படுமா ?




தீக்காயம் ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்?
சமைக்கும்போது உங்கள் கை அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் தீக்காயம் ஏற்பட்டால், முதலில் அதை நீரில் நனைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன்போது, தண்ணீர் அறை வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தீக்காயம் பட்ட இடத்தில் ஐஸ்க்கட்டியை வைப்பதோ அல்லது ஐஸ் வாட்டரை ஊற்றுவதோ கூடாது. இதை செய்வது பாதிக்கப்பட்ட பகுதிகளின் திசுக்களுக்கு சேதம் விளைவிக்கும் அபாயத்தை அதிகரிக்க செய்யும். தீக்காயம் கடுமையாக இருந்தால், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.
சமையலறையில் தீக்காயம் ஏற்படும்போது, பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் பல் துலக்கும் பேஸ்டை பயன்படுத்துகிறார்கள். பல் துலக்கும் பேஸ்ட், வெண்ணெய் அல்லது மயோனைசை பயன்படுத்துவது உங்கள் காயத்தின் நிலைமையை மோசமாக்கும். இதற்கு பதிலாக, ஓவர் தி கவுண்டர் என்ற நுண்ணுயிர் எதிர்ப்பு களிம்புகளை பயன்படுத்தலாம்.
சூரிய ஒளியை தவிர்க்கலாம்:
தீக்காயம் பட்ட முதல் 3 நாட்களுக்கு உங்கள் காயத்தை சூரிய ஒளியில் படுவதை தவிர்க்கவும். இதையடுத்து, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தீக்காயத்தை மூடி கொள்ளவும். மருத்துவர்களின் கூற்றுப்படி, சூரிய கதிர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் கொப்புளங்களை பெரிதாக்கும்.
ALSO READ: உங்கள் நகங்கள் இந்த நிறத்தில் மாறுகிறதா..? பல நோய்களின் அறிகுறிகளை குறிக்கும்!
தீக்காயங்களுக்கு இந்த வீட்டு வைத்தியங்கள்:
கற்றாழை ஜெல்:
தீக்காயங்கள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதியில் கற்றாழை ஜெல்லைப் பூசலாம், இது வீக்கத்தைக் குறைக்கவும், வடுக்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவும். இது அங்கு கொப்புளங்கள் உருவாகாமல் தடுக்க உதவும்.
தீக்காயத்திற்குப் பிறகு கொப்புளங்களை வராமல் தடுக்க வாழைப்பழக் கூழ், தேங்காய் எண்ணெய் அல்லது உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இது தீக்காய கொப்புளங்களை குறைக்க உதவும்.