Food Recipe: விநாயகர் சதுர்த்திக்கு சுலபமான கொழுக்கட்டை செய்வது எப்படி? படிப்படியான வழிமுறை இதோ!
Vinayagar Chaturthi Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தியில் பிரசித்தி பெற்ற கொழுக்கட்டை செய்முறையை இந்த கட்டுரை விளக்குகிறது. பச்சரிசி, புழுங்கல் அரிசி, தேங்காய், வெல்லம் போன்ற பொருட்களை பயன்படுத்தி சுவையான சூப்பரான கொழுக்கட்டையை எப்படி செய்வது என்பதை படிப்படியான வழிமுறைகளுடன் விளக்குகிறது.

விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chaturthi) என்றதும் நம் நினைவுக்கு முதலில் வருவது விநாயகருக்கு பிறகு, கொழுக்கட்டைதான். வெளியே வெள்ளை நிறத்தில் மாவு சுவையுடனும், உள்ளே பரிசு பொருள் மாதிரியான சுவையுடன் பூரணத்துடன் கொழுக்கட்டை (Kozhukattai) சாப்பிட அமிர்தமாக இருக்கும். பொதுவாகவே கொழுக்கட்டையும், வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதாவது, கொழுக்கட்டையின் மேல் உள்ள மாவுதான் அண்டம் என்றும், உள்ளே இருக்கும் இனிப்பான பூரணம் பிரம்மன் என்று அர்த்தம். உலக வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை கடந்து செல்லும்போது பூரணம் என்னும் கடவுளை வணங்கலாம். இதனை அடிப்படையாக கொண்டு முதற்கடவுளான விநாயகருக்கு விநாயகர் சதுர்ச்சியின் கொழுக்கட்டை வைக்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
ALSO READ: சூப்பரா ஒரு ஸ்வீட்ஸ் சாப்பிட ஆசையா..? இந்த அவல் அல்வா ரெசிபியை ட்ரை பண்ணுங்க..!
கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 200 கிராம்
மண்டை வெல்லம் – 100 கிராம்
புழுங்கல் அரிசி – 200 கிராம்
தேங்காய் – அரை மூடி
ஏலக்காய் – 3
உப்பு – தேவையான அளவு




ALSO READ: கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி.. ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள்!
கொழுக்கட்டை செய்வது எப்படி..?
- கொழுக்கட்டை செய்ய முதலில் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி என இரண்டையும் ஒன்றாக எடுத்து நன்றாக கழுவியபின், சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். அதன்படி, அரிசி ஊற வைத்த தண்ணீரை வடித்து ஒரு உலர்ந்த வெள்ளை துணியில் காய விடவும்.
- அரிசியில் உள்ள தண்ணீர் நன்றாக வடிந்து காய்ந்ததும் மிக்ஸி அல்லது வெளியே கடைகளில் கொடுத்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது, அடிகனமான பாத்திரத்தை வைத்து குறைந்த தீயில் மாவை லேசாக வறுத்து எடுக்கவும்.
- மாவில் இருக்கும் ஈரப்பதம் நீங்கி உலர்ந்தவுடன், வேறு ஒரு பெரிய தட்டில் கொட்டி நன்றாக ஆறவிடவும். இப்போது, வறுத்த மாவை சல்லடை கொண்டு நன்றாக சலித்து எடுத்து கொள்ளவும்.
- அடுத்ததாக எடுத்துவைத்துள்ள தேங்காயை துருவி, மண்டை வெல்லத்தை நன்றாக பொடி பொடியாக தட்டி கொள்ளவும். இதனுடன், ஒருபுறம் பாசிப்பயிற்றை வேகவைத்து, ஏலக்காயையும் தூளாக்கி கொள்ளவும்.
- இப்போது ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், மசித்த பாசிப்பயிறு, மண்டை வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக கலக்கவும். அவ்வளவுதான் பூரணம் ரெடி.
- தயாரித்து வைத்துள்ள மாவில் சிறிது உப்பு கலந்து சூடான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்டி எடுத்து கொள்ளவும்.
- எலுமிச்சை அளவு மாவினை எடுத்து அவற்றை வட்டமாக உருட்டி கிண்ணம் வடிவில் உருவாக்கவும். அதனுள், சிறிதளவு பூரணத்தை இட்டு உருண்டையாக திரட்டவும். கொழுக்கட்டையை திரட்டும்போது பூரணம் வெளியே வராமல் பார்த்து கொள்ளவும்.
- கடைசியாக குக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தட்டில் ஒவ்வொன்றாக கொழுக்கட்டையை வைத்து நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை ரெடி.