Skin Care: பொலிவான சரும அழகு வேண்டுமா..? இந்த நெல்லிக்காய் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க!
Amla Face Pack: குறைந்த விலையில் கிடைக்கும் நெல்லிக்காயை கொண்டு எந்த ரசாயனப் பொருட்களையும் பயன்படுத்தாமல் குறைபாடற்ற, பிரகாசமான மற்றும் பளபளப்பான சருமத்தை பராமரிக்க விரும்பினால், நீங்கள் நெல்லிக்காய் ஃபேஸ் பேக்கை எளிதாக முயற்சி செய்யலாம். அதன்படி, நெல்லிக்காய் ஃபேஸ் பேக்கை எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.

நெல்லிக்காய் ஃபேஸ் பேக்
பலருக்கும் நெல்லிக்காயின் (Amla) அருமை தெரியாமல், அதனை புறக்கணிக்க தொடங்குகிறார்கள். நாம் வேண்டாமென்று வெறுக்கும் நெல்லிக்காயில் ஊட்டச்சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நம் உடலுக்கு பல வகைகளில் நன்மை பயக்கும். மேலும், நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி (Vitamin C) உள்ளது. இது சருமத்தை உள்ளிருந்து சரிசெய்து அதன் இயற்கையான பளபளப்பை மீட்டெடுக்க உதவுகிறது. எனவே, குறைந்த விலையில் கிடைக்கும் நெல்லிக்காயை கொண்டு எந்த ரசாயனப் பொருட்களையும் பயன்படுத்தாமல் குறைபாடற்ற, பிரகாசமான மற்றும் பளபளப்பான சருமத்தை பராமரிக்க விரும்பினால், நீங்கள் நெல்லிக்காய் ஃபேஸ் பேக்கை எளிதாக முயற்சி செய்யலாம். அதன்படி, நெல்லிக்காய் ஃபேஸ் பேக்கை எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: கூந்தலுக்கு நன்மை தரும் அரிசி தண்ணீர்.. வீட்டிலேயே ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?
நெல்லிக்காய் ஃபேஸ் பேக்கை எப்படி தயாரிப்பது?
வீட்டில் தயாரிக்கப்பட்ட நெல்லிக்காய் பொடியை ஃபேஸ் பேக் போட பயன்படுத்தலாம். இதற்காக, முதலில் நீங்கள் கடைகளில் வாங்கிய நெல்லிக்காயை கழுவி துண்டுகளாக நறுக்கி, வெயிலில் உலர்த்தி, பின்னர் அதை பொடியாக அரைக்கவும். பின்னர், நெல்லிக்காய் பொடியை ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சள் பொடியுடன் கலந்து பேஸ்ட் செய்து, உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவலாம்.
நெல்லிக்காய் ஃபேஸ் பேக்கை எப்படிப் பயன்படுத்துவது?
முதலில், உங்கள் முகத்தை தண்ணீரை கொண்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர், சற்று ஈரமான முகத்தில் ஒரு நெல்லிக்காய் ஃபேஸ் பேக்கைப் தடவி, 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
நெல்லிக்காய் ஃபேஸ் பேக்கை எத்தனை முறை பயன்படுத்த வேண்டும்?
வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது நெல்லிக்காய் பொடியைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை நீக்கி, இயற்கையான பளபளப்பைக் கொண்டுவர உதவுகிறது. இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்துவது முகத்தை சுத்தப்படுத்துவதோடு, நிறமிகளையும் நீக்க உதவுகிறது.
ALSO READ: எந்த வைட்டமின் குறைபாட்டால் சருமம் கருமையாகிறது..? இதனை சரிசெய்வது எப்படி?
நெல்லிக்காய் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது முகத்தை ஆழமாக சுத்தம் செய்கிறது. அதன்படி, இது இறந்த சரும செல்களை சரிசெய்து, முகத்தை பொலிவுடன் வைத்திருக்கிறது. நெல்லிக்காயை தொடர்ந்து பயன்படுத்துவது கறைகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்க உதவும். இது முகத்தில் ஏற்படும் கருமை மற்றும் மந்தநிலையை நீக்கி, சருமத்தை இயற்கையான பளபளப்புடன் வைத்திருக்கிறது.