Christmas Recipes: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.. எக் புட்டிங், சாண்டா கேக் ரெசிபி இதோ!
Egg Pudding Recipe: கிறிஸ்துமஸ் பொதுவாக ஒரு கிறிஸ்துவ பண்டிகை என்றாலும், மதங்களை கடந்து மற்ற மதங்களை சேர்ந்தவர்களும் கிறிஸ்துமஸை கொண்டாடுகிறார்கள். இந்த நாளை இன்னும் சிறப்பாக்க, நீங்கள் வீட்டிலேயே எளிய முறையில் எக் புட்டிங் (Egg Pudding) மற்றும் சாண்டா கேக் செய்யலாம்.

கிறிஸ்துமஸ் ரெசிபி
கிறிஸ்துமஸ் பண்டிகை (Christmas) உலகம் முழுவதும் நாளை அதாவது 2025 டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நல்ல நாளில் மக்கள் பரிசுகளையும், இனிப்புகளை பரிமாறிக்கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொள்கிறார்கள். இது பொதுவாக ஒரு கிறிஸ்துவ பண்டிகை என்றாலும், மதங்களை கடந்து மற்ற மதங்களை சேர்ந்தவர்களும் கிறிஸ்துமஸை கொண்டாடுகிறார்கள். இந்த நாளை இன்னும் சிறப்பாக்க, நீங்கள் வீட்டிலேயே எளிய முறையில் எக் புட்டிங் (Egg Pudding) மற்றும் சாண்டா கேக் செய்யலாம். இது நிச்சயம் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பிடிக்கும்.
ALSO READ: ரம் சேர்க்காத பிளம் கேக் ரெசிபி.. கிறிஸ்துமஸ் நாளில் குடும்பத்துடன் ருசிக்க சூப்பர் கேக்!
எக் புட்டிங் செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
- முட்டையின் மஞ்சள் கருக்கள் – 6
- சர்க்கரை – 1/3 கப்
- ரம் – 1/4 கப்
- ஜாதிக்காய் பொடி – 1/4 ஸ்பூன்
- உப்பு – 1/4 ஸ்பூன்
- கிரீம் – 1 1/2 கப்
- கேரமல் – 1/2 ஸ்பூன்
- ஸ்ட்ராபெர்ரிகள் – 2
முட்டை புட்டிங் செய்முறை:
- முட்டை புட்டிங் செய்ய முதலில் மைக்டோவேவை 180 டிகிரி செல்சியஸில் சூடாக்கவும். இதற்கு பிறகு, ஒரு பெரிய கிண்ணத்தில் முட்டையின் மஞ்சள் கரு, சர்க்கரை, ரம், உப்பு, ஜாதிக்காய் தூள், கிராம்பு தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக அடிக்கவும். அதன்பிறகு, கிரீம் சேர்த்து ஒருமுறை நன்றாக அடிக்கவும்.
- முட்டை கலவையை மைக்ரோவேவ் கிண்ணத்தில் போட்டு 20-25 நிமிடங்கள் சுடவும். இப்போது குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு, கிண்ணத்தை மைக்ரோவேவிலிருந்து எடுத்து ஆற வைக்கவும்.
- இப்போது அதை மற்றொரு கிண்ணத்தில் வைத்து 1-2 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். அவ்வளவுதான் தயாரிக்கப்பட்ட புட்டிங்கில் ஸ்ட்ராபெர்ரி மற்றும் கேரமல் சேர்த்து பரிமாறவும்.
சாண்டா கேக் செய்ய தேவையான பொருட்கள்:
- மைதா – 1 கப்
- தயிர் – 1/2 கப்
- பால் – 1/4 கப்
- பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன்
- பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்
- வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்
- பால் பவுடர் – 1/4 கப்
- ரெட் ஃபுட் கலர் – 1 சிட்டிகை
- வினிகர் – 1 தேக்கரண்டி
- கிரீம் – 1 கப்
- எண்ணெய் – 1/4 கப்
- சர்க்கரை – 1 கப்
ALSO READ: கிறிஸ்துமஸூக்கு குழந்தைகள் குஷியாக வேண்டுமா..? இந்த கப்கேக் ரெசிபியை ட்ரை பண்ணுங்க!
சாண்டா கேக் செய்முறை:
- கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சாண்டா கேக்கை தயாரிக்க, முதலில் ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து தயிர், சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரை கலவையில் சலிக்கவும், மீண்டும் கலக்கவும். தேவையான அளவு பால் சேர்த்து ஒரு மாவை உருவாக்கவும். இப்போது, மாவில் வினிகர் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது ஒரு கேக் பேக்கிங் பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெய் தடவவும். கேக் மாவை பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பை 180 டிகிரி செல்சியஸுக்கு முன்கூட்டியே சூடாக்கவும். கேக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கேக்கை 25 முதல் 30 நிமிடங்கள் வரை சுடவும். கேக் பேக் ஆகும் போது, ஒரு கிண்ணத்தில் சிறிது கிரீம் ஊற்றி, ரெட் ஃபுட் கலர் சேர்த்து கலக்கவும்.
- கேக் நன்றாக சுட்டதும், அதை அடுப்பிலிருந்து எடுத்து அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இப்போது, பல்வேறு மூலைகளிலும் கிரீம் நிரப்பி, முழு கேக்கையும் முதலில் வெள்ளை கிரீம் கொண்டு மூடவும். பின்னர், கேக்கின் மீது சாண்டா கிளாஸ் வடிவமைப்பை உருவாக்க சிவப்பு கிரீம் பயன்படுத்தவும். பின்னர், கேக்கை குளிர்சாதன பெட்டியில் மற்றொரு அரை மணி நேரம் வைக்கவும். அவ்வளவுதான் சுவையான சாண்டா கேக் ரெடி.