El Niño India impact: எல் நினோவால் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி சரிவு.. சமையல் எண்ணெய் பற்றாக்குறை அபாயம்!
India sugar production 2027: 2026-ல் எல் நினோவால் குறைந்த மழைப்பொழிவு இந்தியாவின் சர்க்கரை உற்பத்தியை கடுமையாகப் பாதித்துள்ளது. அமெரிக்க வேளாண்மை துறை கணிப்பின்படி, 2026-27ல் சர்க்கரை உற்பத்தி 4.1 மில்லியன் டன்கள் குறையும். கரும்பு அறுவடை மற்றும் சர்க்கரை அளவு குறைவதால் இது நிகழும். மேலும், 2027-ல் சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2026ம் ஆண்டில் இந்தியாவில் எல் நினோவால் (EL Nino) காரணமாக மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதனால், கரும்பு அறுவடை மற்றும் சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்படும் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க வேளாண்மை துறை வெளியிட்ட அறிக்கையில் 2026 அக்டோபரில் தொடங்கிய 2026-27 பருவத்திற்கான இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி கணிப்பை, 33.6 மில்லியன் மெட்ரிக் டன்களிலிருந்து 29.5 மில்லியன் மெட்ரிக் டன்களாக குறைந்துள்ளது. சர்க்கரை உற்பத்தி, முன்னர் மதிப்பிடப்பட்டதை விட சுமார் 4.1 மில்லியன் மெட்ரிக் டன்கள் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026ல் ஏற்பட்ட கடுமையான மழைப்பொழிவு பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணமாகும்.
ALSO READ: ஆப்பிள் தோலை நீக்காமல் சாப்பிடலாமா? இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!
அமெரிக்க வேளாண்மை துறை கூறியது என்ன..?
அமெரிக்க வேளாண்மை துறையின் கூற்றுப்படி, குறைந்த மழைப்பொழிவு கரும்பில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கக்கூடும். இந்த சர்க்கரை, ஆலைகளில் சர்க்கரை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், கரும்பு அறுவடை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையும் சர்க்கரை ஆலைகளின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும். இதன் காரணமாக, வறட்சி போன்ற சூழ்நிலைகளால் 2027ம் ஆண்டில் கருப்பு தட்டுப்பாடு ஏற்படலாம்.
குறைந்த மழைப்பொழிவின் காரணமாக, கரும்பு பயிர்களுக்கு போதுமான நீர் கிடைக்காது. இது கரும்பின் வளர்ச்சியையும் சர்க்கரை அளவைவும் பாதிக்கக்கூடும். இதன் விளைவாக, சர்க்கரை ஆலைகளுக்கு அரைப்பதற்காக குறைவான கரும்பே கிடைக்கக்கூடும். இது ஒட்டுமொத்த சர்க்கரை உற்பத்தியையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
எண்ணெய் பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்பா..?
2027ம் ஆண்டில் இந்தியா சமையல் எண்ணெய் பற்றாக்குறையையும் எதிர்கொள்ளலாம். இந்திய காய்கறி எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மதிப்பீட்டின்படி, 2025-26 பருவத்தில் 9.6 மில்லியன் டன்களாக இருக்கும் இந்தியாவின் உள்நாட்டு சமையல் எண்ணெய் உற்பத்தி, நிலையற்ற வானிலை நிகழ்வு விவசாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இந்தியா, இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து மட்டுமல்லாமல், பல்வேறு புவியியல் பகுதிகளிலிருந்தும் பாமாயில் இறக்குமதியைச் சார்ந்துள்ளது. 2022-ல் இந்தோனேசியா ஏற்றுமதிக்கு இடைக்காலத் தடை விதித்தபோதுகூட, இந்தியா அந்த நெருக்கடியைச் சமாளித்தது. இதேபோல், எல் நினோ ஏற்படுத்தக்கூடிய சவால்களையும் அரசாங்கம் சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவின் அதிக சோயாபீன் உற்பத்தி செய்யும் சில பகுதிகள் வறட்சி போன்ற சூழ்நிலையை எதிர்கொள்வதால், 2026-27 பருவத்தில் சமையல் எண்ணெய் உற்பத்தியில் சுமார் 5-10% பாதிப்பு ஏற்படும். இருப்பினும், சோயாபீன் அதிக அளவில் பயிரிடப்படும் மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதியில் போதுமான மழைப்பொழிவு இருப்பதால், இதற்கு ஒரு நிவாரணம் கிடைத்துள்ளது.
ALSO READ: சமையலறைக்கு ஏற்ற பேக்ஸ்பிளாஷ் தேர்வு செய்வது எப்படி?
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த இறக்குமதி 16 மில்லியன் டன்களைத் தாண்டியது. இதன் மூலம், அமெரிக்கா மற்றும் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி, சமையல் எண்ணெயின் மிகப்பெரிய இறக்குமதியாளராக இந்தியா உருவெடுத்தது. சோயா மற்றும் சூரியகாந்தி போன்றவை எண்ணெய் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக உள்ளது. எல் நினோ காரணமாக இவற்றின் உற்பத்தியை இழக்கும்போது, இந்திய போன்ற நாடுகள் மறுசீரமைப்புக்குத் தள்ளப்படலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர்.



