Diwali Sweets: சர்க்கரை நோயால் ஸ்வீட் சாப்பிடாத கவலை போதும்.. தீபாவளிக்கு சர்க்கரை இல்லாத ஆரோக்கிய லட்டு ரெசிபி இதோ!
Diwali Dry Fruits Laddu: சர்க்கரை இல்லாத இனிப்புகளுக்கான செய்முறையை நாங்கள் உங்களுக்கு கொண்டு வந்துள்ளோம். அதன்படி, தீபாவளிக்கு சர்க்கரை இல்லாத ஆரோக்கியமான லட்டுகளை செய்வோம். இவற்றின் அற்புதமான சுவை உங்களை நிச்சயம் கவரும். இவை சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தீபாவளி (Diwali) என்பது பட்டாசுகள் வெடிப்பது மட்டுமல்ல, இனிப்புகளின் பண்டிகையாகவும் பார்க்கப்படுகிறது. கடைகளில் இருந்து வீடுகள் வரை, இனிப்புகள் ஏராளமாக உள்ளன. எல்லா வகையான இனிப்புகளும் (Sweets) நிறைந்துள்ளன. நீங்கள் சர்க்கரை நோயாளிகளாக இருந்தால், நிச்சயமாக அதிக இனிப்புகளை சாப்பிடவே கூடாது. ஆனால, இந்த தீபாவளிக்கு உங்கள் இனிப்பு பசியை போக்க வேண்டும் என்றால், அதற்கான தீர்வை நாங்கள் தருகிறோம். அந்தவகையில், சர்க்கரை இல்லாத இனிப்புகளுக்கான செய்முறையை நாங்கள் உங்களுக்கு கொண்டு வந்துள்ளோம். அதன்படி, தீபாவளிக்கு சர்க்கரை இல்லாத ஆரோக்கியமான லட்டுகளை செய்வோம். இவற்றின் அற்புதமான சுவை உங்களை நிச்சயம் கவரும். இவை சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் இருக்கும். இதனை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
ALSO READ: தீபாவளி பலகாரம்! பாரம்பரியமிக்க அதிரசம் செய்முறை இதோ!




சர்க்கரை இல்லாத லட்டு செய்வது எப்படி..?
- பாதாம் – 1 கப்
- முந்திரி – 1 கப்
- வால்நட்ஸ் – 1 கப்
- பிஸ்தா – 1 கப்
- உலர் திராட்சை – 100 கிராம்
- உலர் பேரிச்சம்பழம் – 100 கிராம்
- நெய் – 3 தேக்கரண்டி
- தண்ணீர் – 1 கிளாஸ்
- ரோஜா இதழ்கள் – 10 – 25
- ஏலக்காய்தூள் – 1 ஸ்பூன்
- குங்குமப்பூ – 10
ALSO READ: வந்துவிட்டது தீபாவளி! கடைகளில் காஜூ கட்லி காஸ்ட்லியா..? எளிதாக வீட்டிலேயே இப்படி செய்யலாம்!
சர்க்கரை இல்லாத லட்டு செய்வது எப்படி..?
- முதலில் நீங்கள் பிஸ்தா, வால்நட், முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும். இதற்கு பிறகு, ஒரு கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றாமல் 1 ஸ்பூன் நெய்யை சேர்த்து சூடாக்கவும்.
- நெய் சூடானதும், நறுக்கிய உலர் பழங்களை சேர்க்கவும். 5 நிமிடங்கள் கிளறி, நன்றாக வறுக்கவும். உலர் பழங்களை வறுத்த பாத்திரத்தை காலி செய்து, அதில் 1 கப் தண்ணீரை சூடாக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் 10-15 ரோஜா இதழ்களை சேர்க்கவும். இப்போது, பேரீச்சம்பழம் மற்றும் திராட்சையை ஒரு பேஸ்ட் செய்து அதில் சேர்க்கவும். இதை தொடர்ந்து 5 நிமிடங்கள் கிளறவும்.
- இவற்றை ஒரு பேஸ்ட் போல் வரும்வரை காத்திருக்கவும். பேஸ்ட் சிறிது காய்ந்ததும், அதில் வறுத்த உலர் பழங்களை சேர்க்கவும். உலர் பழங்களை சேர்த்த பிறகு, வாணலியில் கலவையை தொடர்ந்து கிளறவும்.
- உலர் பழங்கள் நன்கு கலந்தவுடன், அடுப்பை ஆஃப் செய்யவும். அதிக சுவைக்கு ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ இழைகளை சேர்க்கலாம். இப்போது, கலவையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். இந்த நேரத்தில் இது மிகவும் சூடாக இருக்கும்.
- எனவே, லட்டு பிடிப்பதற்கு முன் அதை சிறிது குளிர விடுங்கள். உங்கள் விரலால் தொட்டு பார்த்து போதுமான அளவு குளிர்ச்சியாக இருந்தால், உங்கள் கைகளில் சிறிது நெய் தடவி எலுமிச்சை வடிவில் லட்டை பிடியுங்கள். அவ்வளவுதான், சர்க்கரை இல்லாத ஆரோக்கியமான இனிப்பு லட்டு தயார்.