AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மக்காச்சோள நாரில் சிறுநீரக நோய் குணமாகுமா? அதிர்ச்சி உண்மை..

Corn Silk: மக்காச்சோள நாரில் சிறுநீரைப் பெருக்கும் பண்புகள் உள்ளதால், இது சிறுநீரகச் செயல்பாட்டிற்கு ஓரளவுக்குத் துணையாக இருந்து புதிய கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. இருப்பினும், இது தீவிரமான சிறுநீரக நோய்களைக் குணப்படுத்தவோ அல்லது ஏற்கனவே உள்ள சிறுநீரகக் கற்களைக் கரைக்கவோ செய்யாது என்று மருத்துவ வல்லுநர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.

மக்காச்சோள நாரில் சிறுநீரக நோய் குணமாகுமா?  அதிர்ச்சி உண்மை..
மக்காச்சோள நார்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 05 Oct 2026 10:17 AM IST

மக்காச்சோளப் பூவின் மெல்லிய நார்ப்பகுதியான ‘கான் சில்க்’ (Corn Silk) சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறுகளுக்குச் சிறந்த நிவாரணி என்ற பிரச்சாரம் அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனை நீரில் கொதிக்க வைத்துப் பருகுவது சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்றும், சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளை (UTI) முற்றிலுமாகப் போக்கும் என்றும் சில யோகா பயிற்றுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இத்தகைய கூற்றுகளில் உள்ள உண்மைத்தன்மை குறித்தும், அறிவியல் பூர்வமான சான்றுகள் என்ன சொல்கின்றன என்பது குறித்தும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தங்களின் தெளிவான விளக்கங்களை முன்வைத்துள்ளனர்.

சிறுநீர் உற்பத்தியும் இரத்த அழுத்தக் கட்டுப்பாடும்

மக்காச்சோள நாரில் சிறுநீரைப் பெருக்கும் ‘டைஃப்ளூரிடிக்’ (Diuretic) பண்புகள் அதிக அளவில் நிறைந்துள்ளன என்று உணவியல் ஆலோசகர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இது உடலிலுள்ள தேவையற்ற திரவங்களைச் சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவி செய்கிறது. மேலும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சில மருத்துவக் கூறுகளும், திசுக்களைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகளும் இதில் காணப்படுகின்றன. இதனால் சிறுநீரகச் செயல்பாட்டிற்கு இது ஓரளவு துணையாக இருக்க முடியுமே தவிர, தீவிரமான சிறுநீரக நோய்களைக் குணப்படுத்தும் அளவிற்கு இதன் பயன்பாட்டிற்கு மனிதர்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ ஆதாரங்கள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

Also Read: டக்கென காலியாகிறதா சிலிண்டர்..? கேஸ் ஆயுளை நீட்டிக்கும் ரகசியங்கள்..!

சிறுநீரகக் கற்களைக் கரைக்குமா?

மக்காச்சோள நார் நீரைக் குடிப்பதால் சிறுநீரின் அளவு அதிகரித்து, புதிய கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் மட்டுமே குறைகின்றன. ஆனால், ஏற்கனவே சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்களை இந்த நீர் கரைத்துவிடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிகளவில் தண்ணீர் அருந்துவது எந்த அளவிற்குச் சிறுநீரை நீர்த்துப்போகச் செய்து தாதுக்களின் அடர்த்தியைக் குறைக்கிறதோ, அதே வேலையைத் தான் இந்த மூலிகை நீரும் செய்கிறது. எனவே, பெரிய அளவிலான கற்களால் அவதிப்படுபவர்கள் மருத்துவச் சிகிச்சைக்கு மாற்றாக இதை எடுத்துக்கொள்ளக் கூடாது.

பயன்பாட்டு எச்சரிக்கைகளும் பக்கவிளைவுகளும்

அடிக்கடி ஏற்படும் சிறுநீரகத் தொற்றுக்கு மக்காச்சோள நார் தற்காலிக நிவாரணம் அளிக்கக் கூடுமே தவிர, பாக்டீரியா தொற்றை முழுமையாகக் அழிக்க நுண்ணுயிர் எதிர்ப்பி (Antibiotics) சிகிச்சையே அவசியமாகும். மேலும், இந்த நாரைப் தொடர்ந்து பயன்படுத்தும்போது உடலின் பொட்டாசியம் அளவு குறைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே சிறுநீரகச் செயலிழப்பு உள்ளவர்கள், இரத்த அழுத்த மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி இதனை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us