Copper Clean: கருமை படிந்த செம்பு பாத்திரங்களா..? இந்த குறிப்புகளை பின்பற்றி சுத்தம் செய்யலாம்!
How to Clean Copper: செம்பு பாத்திரங்களை (Copper) சுத்தம் செய்ய சாதாரண பாத்திரம் தேய்க்கும் சோப்பை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இவை பெரியளவில் எந்த பலனையும் தராது. அதேநேரத்தில், செம்பு பாத்திரத்தை சுத்தமாக மாற்ற, பல இராசயனங்களை பயன்படுத்துகிறார்கள். இது கைகளை சில நேரங்களில் காயப்படுத்தும்.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் (Water) குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. இதனால்தான் மக்கள் பெரும்பாலும் வீட்டில் செம்பு பாட்டில்கள் மற்றும் குடங்களை பயன்படுத்துகிறார்கள். இதை நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் விடும்போது, இவை முற்றிலுமாக கருப்பாக மாறி அழுக்காக தோன்றும். இந்த நிறம் மாறிய செம்பு பாத்திரங்களை (Copper) சுத்தம் செய்ய சாதாரண பாத்திரம் தேய்க்கும் சோப்பை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இவை பெரியளவில் எந்த பலனையும் தராது. அதேநேரத்தில், செம்பு பாத்திரத்தை சுத்தமாக மாற்ற, பல இராசயனங்களை பயன்படுத்துகிறார்கள். இது கைகளை சில நேரங்களில் காயப்படுத்தும். அந்தவகையில், வீட்டிலேயே ரசாயனங்களை பயன்படுத்தாமல் செம்பு பாத்திரங்களை எப்படி கருமையை நீக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
எப்படி சுத்தம் செய்யலாம்..?
ஒரு கிண்ணத்தில் 3 முதல் 4 ஸ்பூன் கடலை மாவை சேர்க்கவும். மேலும், இதில் ஒரு ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் சேர்க்கவும். இந்த பேஸ்டை இப்போது நன்றாக கலந்து கருமை நிறம் படிந்த செம்பு பாத்திரத்தின் நன்கு தடவவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு துணி அல்லது காகிதத்தை கொண்டு தேய்த்தால் செம்பு பாத்திரம் பழைய நிலைக்கு வரும். இந்த பேஸ்ட்டை பாத்திரத்தின் உட்புறத்திலும் தடவி சுத்தம் செய்யலாம்.
ALSO READ: கண் கண்ணாடி லென்ஸ்களில் கீறல்களா..? இதை செய்தால் உடனடியாக மறையும்!




புளி:
நீங்கள் உணவில் மசாலா சேர்க்க புளியை பயன்படுத்துகிறீர்கள். ஆனால், செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்யவும் இதை பயன்படுத்தலாம். புளியை தண்ணீரில் ஊறவைத்து, பேஸ்டாக பிசைந்து, பேஸ்ட்டை பாத்திரங்களில் தடவி மெதுவாக தேய்த்து, பின்னர் துவைக்கவும். இது அவற்றை புதியது போல் வைத்திருக்கும்.
வெள்ளை வினிகர்:
வெள்ளை வினிகருக்கு சுத்தம் செய்யும் பண்புகள் உள்ளன. ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 டீஸ்பூன் வெள்ளை வினிகரை கலந்து அசுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். பின்னர், கலவையில் சிறிதளவு உப்பு சேர்க்கவும். இப்போது, வினிகரை பயன்படுத்தி உங்கள் செம்பு பாத்திரங்களை தேய்த்தால் அவை மீண்டும் பளபளப்பாக மாறும்.
பேக்கிங் பவுடர்:
பேக்கிங் பவுடர் பல பொருட்களை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். இது உங்கள் செம்பு பாத்திரங்களை சுத்தம் செய்ய கூட இதை பயன்படுத்தலாம். பேக்கிங் பவுடர் மற்றும் வாஷிங் பவுடரை ஒரு டப் தண்ணீரில் கலந்து, பாத்திரங்களை இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் அவற்றை சுத்தம் செய்யவும்.
ALSO READ: சப்பாத்தி கட்டைகளில் பூஞ்சை வளரும் ஆபத்து.. இப்படி சுத்தம் செய்வது ஏன் முக்கியம்?
இந்த விஷயங்களில் கவனம் தேவை:
உங்கள் செம்பு பாத்திரங்களை பளபளப்பாக வைத்திருக்க, சில விஷயங்களை சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். உங்கள் செம்பு பாத்திரங்கள் எப்போதும் வெதுவெதுப்பான நீரில் கழுவதும். மேலும், கழுவிய பின் அதை உலர வைக்கவும். இல்லையெனில், அது கறை படிந்து போகக்கூடும். தொடர்ந்து, உங்கள் செம்பு பாத்திரங்களில் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவதும் அதன் பளபளப்பை பராமரிக்க உதவும்.